பூ தூவ சொன்னால் தட்டோடு தூக்கி எறிந்த முதல்வர்..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | MK Stalin

மேட்டூர் அணையை திறந்து வைக்க சென்ற முதல்வர் பூவோடு சேர்த்து தட்டையும் அணையில் வீசிய நிகழ்வு சிரிப்பை உண்டாக்கியுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு வருடங்கள் ஓடி விட்டன. முதலமைச்சராக பதவியேற்ப்பதற்கு முன்பு பல ஏளனத்திற்கு உள்ளனவர்தான் மு.க.ஸ்டாலின். யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே, பூனை மேல் மதில், டிசம்பர் 26 சுதந்திர தினம் என்று அவரின் சில பேச்சுகள் நெட்டிசன்களால் கலாய்த்து தள்ளப்பட்டது. ஆனால் பதவியேற்ற பின்பு தன்னுடைய ஒவ்வொரு ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் அந்த விமர்சனங்களை எல்லாம் மாற்றி வருகிறார் ஸ்டாலின். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூ தூவ சொன்னால் தட்டோடு தூக்கி எறிந்த முதல்வர்..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | MK Stalin 1

விளம்பரம்

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது மேட்டூர் அணை. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீரை சேலத்தில் தேக்கி வைத்து அணை நிரம்பிய பின்பு குறுவை சாகுபடிக்காக திறந்துவிடுவது வழக்கம். இது வருடா வருடம் ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த வருடம் கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளில் முதன்முறையாக மே மாதமே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. Youtube Video Code Embed Credits: Sun News 

பூ தூவ சொன்னால் தட்டோடு தூக்கி எறிந்த முதல்வர்..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் | MK Stalin 3

விளம்பரம்

இதற்காக சென்னையில் இருந்து சேலம் சென்ற முதல்வர், அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் பூ தூவினார். அவருடன் அமைச்சர்களும் பூ தூவினர். பின்னர் மீண்டும் போட்டோகிராபர்கள் கேட்டுக் கொண்டதால் பூ தூவினார் முதல்வர். அப்போது பூவுடன் சேர்த்து தட்டையும் அணையில் வீசி எறிந்தார். இதை பார்த்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிரித்து விட்டனர். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நெட்டிசன்கள் “எதுக்கு கொஞ்சம் கொஞ்சமா பூ தூவிக்கிட்டு..அதான் முதல்வர் தட்டோட தூக்கி எறிந்துவிட்டார்” என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video

தொடர்புடையவை  "இன்குலாப் ஜிந்தாபாத்" பட்டமளிப்பு மேடையில் முழங்கிய குரல்!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment