செம்ம மாஸாக வந்து இறங்கிய புது ஆதி குணசேகரன்.! இவருக்கு பதில் இவர்.! யாருனு பாருங்க.!

அனைவரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புது ஆதி குணசேகரன் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது வேலராமமூர்த்தி தான் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவு எதிர்பாராதது. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரும் தங்கள் வீடுகளில் ஏற்பட்ட இழப்பு போல அவரின் மறைவை கருதி வந்தனர். அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் மூலமாக ஆதி குணசேகரனாக ஒவ்வொரு வீட்டிலும் வாழ்ந்திருந்தார் மாரிமுத்து. இந்த நிலையில் அவரது மறைவுக்கு பின்னர் யார் ஆதி குணசேகரனாக நடிக்க இருக்கிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையை எழுந்து வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்ம மாஸாக வந்து இறங்கிய புது ஆதி குணசேகரன்.! இவருக்கு பதில் இவர்.! யாருனு பாருங்க.! 1
தற்போது எதிர்நீச்சல் கதைப்படி ஆதி குணசேகரன் காணாமல் போய்விட்டதாகவும், அவர் ஊருக்கு கிழக்கே நூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகவும் அவரது தம்பிகள் கண்டுபிடித்து வந்து கூறினர். ஆதி குணசேகரன் திரும்பி வரும் பொழுது அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் கொலை செய்து விடுமாறும் அதற்காக திருவிழாவை ஏற்பாடு செய்யுமாறும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ஆதி குணசேகரனின் கதாபாத்திரம் உள்ளே என்ட்ரி கொடுத்துள்ளது. அது வேறு யாருமில்லை நாம் அனைவரும் எதிர்பார்த்ததுபோல நடிகர் வேலராமமூர்த்தி தான்.

விளம்பரம்
தொடர்புடையவை  என் கேரக்டர் பத்தி தப்பா சொல்லாத நிரூப்.. மனமுடைந்து அழுத ஜூலி | BiggBoss Ultimate Mar02 Promo1

செம்ம மாஸாக வந்து இறங்கிய புது ஆதி குணசேகரன்.! இவருக்கு பதில் இவர்.! யாருனு பாருங்க.! 3
கதிர் போன் செய்து அண்ணா வாருங்கள் என்று கூற அப்போது ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி வந்து இறங்குகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment