அச்சு அசல் “சில்க்” போலவே போட்டோஷூட் செய்த சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் | Kaajal Pasupathi

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை என்றால் அது சில்க் சுமிதா தான். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அவர் பிழைப்புத் தேடி சென்னை வந்துள்ளார். ஆனால் அவருக்கு கிளாமர் ரோலில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று ஆரம்பித்துள்ளார். பின்னாளில் தனக்கு கிளாமர் ரோல் வேண்டாம், ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்ததால் பல வாய்ப்புகளை இழந்தார். பின்னர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்தும் போனார்.

அச்சு அசல் "சில்க்" போலவே போட்டோஷூட் செய்த சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் | Kaajal Pasupathi 1

விளம்பரம்

சில்க் சுமிதாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவருடைய கண்கள் மிக அழகாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. அவருக்கு பிண்ணனி குரல் தான் என்றாலும் மிக கச்சிதமாக பொருந்தி போகும் அளவிற்கு குரலும் நடிப்பும் இருக்கும். அவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அவரைப் போலவே மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடன இயக்குனநர் சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி.

தொடர்புடையவை  "வெளிவரமுடியாமல் தவிக்கும் தி வாரியர் படம்....திடீரென வந்த சோதனை"

அச்சு அசல் "சில்க்" போலவே போட்டோஷூட் செய்த சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் | Kaajal Pasupathi 3

விளம்பரம்

காஜல் வசூல் ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் டிஷ்யூம், கோ, கலகலப்பு 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் சரியாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் பிக்பாஸுக்கு வந்தார். அங்கேயும் சரியாக விளையாடாத காரணத்தால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் காஜல் தற்போது சில்க் சுமிதா போல் மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை போட்டு தலைவி மாதிரி யாரும் வர முடியாது, என்றாலும் முயற்சி செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment