பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! 1

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் பல இடங்களில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஒரு குழந்தையும் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பல்வேறு இடங்களில் நேற்று இரவில் ஏற்றப்பட்டதாகவும் அதில் சுமார் 20வதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் குறைந்தபட்சம் ஒருவர் பலயாகியள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலர் தங்கள் வீடுகள், மருத்துவமனை, வணிக வளாகங்கள் ஆகியவற்றை விட்டு வெளியேறினர்.8இந்த நிலநடுக்கம் கடலோர மாகாணமான சுல்தான் குடரத்தின் நிலப்பரப்புள்ள நகரமான கொலம்பியோவிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல வீீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே தெற்கு ஜெனரல் சாண்டோஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் அது நிலநடுக்கத்தால் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நிலநடுக்கம் தாக்கிய இடங்களிலுள்ள பள்ளிக்கூடங்களை இன்று ஆய்வு செய்யப்போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment