சூரரைப்போற்று எடுக்க சொன்னா ‘பிதாமகன்’ எடுத்து வச்சி இருக்கீங்களேடா..நாசம் செய்யும் ரீமேக்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பலரின் உள்ளத்தை கவர்ந்த ஒரு படம் என்றால் அதில் “சூரரைப் போற்று” முக்கிய இடத்தைப்பெறும். 2020ம் ஆண்டு வெளியான இந்த படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியிருந்தார். நல்ல தரமான படங்களை எடுக்கும் இயக்குனர்களில் ஒருவராக சுதா கொங்காரா திகழ்கிறார். பாவக் கதைகள் படத்தில் வரும் “தங்கம்” கதையும் இவர் இயக்கிய படமே. சூரரைப் போற்று திரைப்படமும் அது போலவே ஒரு வித்தியாசமான படம். திரையரங்குகளில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வண்ணம் ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா.

சூரரைப்போற்று எடுக்க சொன்னா 'பிதாமகன்' எடுத்து வச்சி இருக்கீங்களேடா..நாசம் செய்யும் ரீமேக் 1

விளம்பரம்

ஓடிடியில் சோதனை முயற்சியாக சூர்யா இதை செய்தார் என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது இந்த படம். ஏழைகள் விமானத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக இராணுவத்தில் பைலட் வேலையை உதறிவிட்டு விமான நிறுவனம் உருவாக்கிய கதை. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பார். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஹிந்தி ரீமேக்கையும் சுதா கொங்காராவே தயாரித்து வருகிறார்.

தொடர்புடையவை  அம்மா அப்பாவை சேர்த்து வைக்கும் முத்து...! மகிழ்ச்சியில் சிரிக்கும் மீனா..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ இதோ

சூரரைப்போற்று எடுக்க சொன்னா 'பிதாமகன்' எடுத்து வச்சி இருக்கீங்களேடா..நாசம் செய்யும் ரீமேக் 3

விளம்பரம்

தற்போது ஹிந்தி ரீமேக்கில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அக்‌ஷய் குமாரின் தோற்றம் பிதாமகன் விக்ரம் போல உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் அக்‌ஷய் குமாரை கலாய்த்து வருகின்றனர். மேலும் சூரரைப் போற்று மாறன் மாதிரி நடிக்கச் சொன்னால் இவர் பிதாமகன் விக்ரம் மாதிரி இருக்கிறார் என்று வச்சி செய்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment