விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன். ஸ்ரீலங்கா தமிழரான இவர் அங்குள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர். திடீரென விஜய் டிவியின் அழைப்பு வரவே இங்கு வந்து தமிழக மக்களுக்கும் பரிட்சயம் ஆனார். நடிகர் கவினுடன் காதல், தந்தை வந்த பிறகு நடந்த அமர்க்களங்கள் என பல்வேறு வகையிலும் ரசிகர்கள் இவரை இன்னமும் ஞாபகம் வைத்து கொள்ளும் அளவிற்கு நன்றாகவே போட்டியில் பங்கெடுத்தார். அந்த போட்டியில் இருந்து வெளியேறி நடிகர் கவினுடன் காதல் மோதலை ஆங்காங்கே வெளிப்படுத்தி வந்தார்.

அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து, நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினர். அதற்காக தன்னுடைய உடலை உடற்பயிற்சி மூலம் பெருமளவு குறைத்து இப்பொது ஃபிட்டாக வலம் வருகிறார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவருக்கு அதில் பின் தொடர்பவர்களும் அதிகம். அவ்வப்போது எதாவது ஒரு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும், உடற்பயிற்சி செய்யும் படங்களையும் வெளியிட்டு வருகிறார். பிக் பாஸ்ஸில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான தர்ஷனுடன் சமீபத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்து தயாரித்த “கூகிள் குட்டப்பன்” என்ற படத்தில் நாயகியை தோன்றினர். படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு போகவில்லை.

என்றாலும் விடாமல் தன்னுடைய நடிப்பு ஆர்வத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டு சில புகைப்படங்கள் நேற்று வெளியாகின. “லாஸ்லியா லீக்ஸ்” என பெயரிட்டு 3 புகைப்படங்கள் வெளியாகின. பலருக்கும் இது அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அவர், ” என்னுடைய இன்ஸ்டாராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. ஆனால் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது” என கூறி இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். இது உண்மை தானா? இல்லை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இவர் இப்படி செய்துள்ளாரா? என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.