லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நடித்துள்ள படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே பிரம்மாண்டம் தான். லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தான் சரவணன். வீட்டிற்கு தேவைப்படும் சிறிய பொருள் தொடங்கி வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்கள், துணிமணிகள், எலக்ட்ரானிக் ஜமான்கள் என அனைத்தும் மிக்குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாபெரும் சாம்ராஜ்ஜியம். சென்னையில் பல கிளைகளுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளர் சரவணன் திடீரென ஒருநாள் டிவியில் தோன்றினார். அவரது கடை விளம்பரத்தில் அவரே தோன்றி நடித்தார். இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது உருவத்தை பார்த்து பலரும் உருவக்கேலி செய்தனர். கீழே உள்ள ட்ரைலர் வீடியோவை பார்க்கவும்

அவரது உருவம் மற்றும் அதீத மேக்கப் காரணமாக அவர் உருவக்கேலி செய்யப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் மேலும் தனது கடை விளம்பரம் அனைத்திலும் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினாமவின் முண்ணனி நடிகைகளான ஹன்சிகா தமன்னா போன்றவர்கள் உடன் இணைந்து விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. மீம்ஸ் போட்டு அவரை கலாய்க்க தொடங்கினர். தற்போது அவர் ஒருபடி மேலே போய் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் நடித்துள்ளார். Youtube Video Code Embed Credits: Think Music

இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெரி ஆகிய இருவர் தயாரிதுள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்கய் பெற்று இருந்தது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் நமது மனங்களில் நீங்கா இடம் பிடித்த சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நடித்த கடைசி படம் இதுவாகும். அதனாலேயே இந்த படத்தை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக உள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ட்ரைலர் மாஸ் ஆக வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண…Watch the below Video