“ஃபாரின் நடிகையுடன் டூயட் ஆடும் சிவகார்த்திகேயன்”!!வெளியான “Sk20” படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள்

ஒரு சில நடிகர்களுக்கே அமையும் ஒரு அரிதான விஷயம் சிவகார்த்திகேயனிடம் உள்ளது. எளிதாக நம்முடைய மக்கள் ஒரு நாயகனை அவ்வளவு எளிதில் ரசித்து விட மாட்டார்கள். ஆனால் தான் அறிமுகமான முதல் படம் தொட்டே ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்கள் மிக பெரிய வசூல் வேட்டையை செய்தன. டாக்டர் பாடம் சிவாவின் நடிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. கொரோனா காலகட்டம் முடிந்து திரையரங்கு திறந்த பின் விஜயின் மாஸ்டர் படத்திற்கு பின் இவரின் டாக்டர் தான் திரையரங்கு உரிமையாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்த படம்.

"ஃபாரின் நடிகையுடன் டூயட் ஆடும் சிவகார்த்திகேயன்"!!வெளியான "Sk20" படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதே போல அறிமுக இயக்குனர் சிபி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான டான் படமும் இரண்டு வாரங்களில் 100 கோடியை தாண்டி வசூல் ஈட்டி வருகிறது. இந்த வருடம் வெளியாகியுள்ள மாபெரும் வசூல் செய்த படங்களில் இந்த படமும் உள்ளது. நடிகர்கள் விஜயின் “பீஸ்ட்” மற்றும் அஜித்தின் “வலிமை” படத்திற்கு அடுத்தபடியாக இதுவே இந்த வருடத்தின் இப்போதைய அதிக வசூல் செய்த படங்கள்.

தொடர்புடையவை  குழந்தையை நல்ல வளர்க்கணும்..! தன்னுடைய குழந்தை குறித்து மனம் திறந்து பேசிய VJ பிரியங்கா

இப்பொது சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குனர் அனூப் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் வெளிநாட்டு நாயகி ஒருவர் நாயகியாக நடித்து வருவது நாம் அறிந்ததே. படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பொது படத்தின் ஒரு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

"ஃபாரின் நடிகையுடன் டூயட் ஆடும் சிவகார்த்திகேயன்"!!வெளியான "Sk20" படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் 3

இந்த படத்தின் அனுதீப் தெலுங்கில் வெற்றி பெற்ற காமெடி படமான “ஜாதி ரத்னாலு” என்ற படத்திற் இயக்கி இருந்தார். முழுநீள காமெடி படமான இதில் நவீன் போலிஷெட்டி நாயகனாக நடித்துள்ளார். இப்பொது அவர் தன்னுடைய இரண்டாவது படமாக இதனை இயக்கி வருகிறார்.

விளம்பரம்

தமிழை தாண்டி நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மார்க்கெட்டை விரிவுபப்டுத்த இப்பொது இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த படப்பிடிப்பில் அவர் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட படங்கள் மற்றும் நாயகியுடன் நடனம் ஆடும் காட்சிகள் இப்பொது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  கதிருக்காக ஹோட்டலுக்கு வந்த மூர்த்தி.! கண்கலங்க வச்சிட்டீங்கப்பா..அண்ணன் தம்பிங்கன்னா இப்படி இருக்கணும்

"ஃபாரின் நடிகையுடன் டூயட் ஆடும் சிவகார்த்திகேயன்"!!வெளியான "Sk20" படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் 5

விளம்பரம்

Leave a Comment