எஸ்ஜே சூர்யா நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்..ட்ரைலரே சும்மா மிரட்டலா இருக்கு | Bommai Trailer

எஸ்ஜே சூரியா மற்றும் பிரியா பாவனிஷங்கர் இணைந்து நடித்துள்ள படம்தான் பொம்மை. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டு இருந்தார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் காதல் கலந்த ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. எஸ்ஜே சூர்யாவை பொறுத்தவரை இயக்குனராக வாழ்க்கைய ஆரம்பித்தவர். பின்னர் இயக்கத்தை விட்டு விட்டு நடிகராக பல படங்களில் அசத்தி வருகிறார். நண்பன், எலி, நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு ,டான் போன்ற படங்களில் நடித்து உள்ளார். மாநாடு படத்திற்கு பின்னர் இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதில் இவர் சொல்லும் தலைவரே, தலைவரே வசனமும், வந்தான், சுட்டான், செத்தான், ரிப்பீட்டு வசனமும் வேற லெவலில் வைரலானது. ட்ரைலர் வீடியோ கீழே உள்ளது. 

எஸ்ஜே சூர்யா நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்..ட்ரைலரே சும்மா மிரட்டலா இருக்கு | Bommai Trailer 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக எஸ்.ஜே சூர்யா ராதா மோகன் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். பொம்மை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டது. 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே வந்தது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. அதன்படி ட்ரைலர் மாஸாக வெளியாகியுள்ளது.

தொடர்புடையவை  பிரம்மாண்டமாய் நடந்த இசை வெளியீட்டு விழா..கெத்தாக என்ட்ரி கொடுத்த ஆண்டவர் | Audio Launch Promo

எஸ்ஜே சூர்யா நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்..ட்ரைலரே சும்மா மிரட்டலா இருக்கு | Bommai Trailer 3

விளம்பரம்

இந்த படத்தைப் பற்றி எஸ்ஜே சூர்யா கூறுகையில் கதை 50% என்றால், யுவன் இசை மீதி 50% என்றார். மேலும் பொம்மை படத்தில் ராஜ்குமார் என்ற தனது கதாபாத்திரத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. தற்போது படத்தின் ட்ரைலர் மிரட்டலாக வெளியாகியுள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண.. Watch the Below Video

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment