பரத், வாணிபோஜன் நடிக்கும் ‘மிரள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியானது | Miral

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடித்த படம் தான் மிரள். இந்த படத்தை ராட்சசன் மற்றும் ஓ மை கடவுளே படத்தை தயாரித்த டில்லிபாபு இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. இந்த படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் டில்லி பாபு ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.

பரத், வாணிபோஜன் நடிக்கும் 'மிரள்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியானது | Miral 1

விளம்பரம்

இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கியுள்ளார். கதையின் பின்புலமும், கதை நகரும் விதமும் விறுவிறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றாடி இருக்கும் ஆலைகளை சுற்றியே படம் இருக்கும், பல இடங்களில் அழுத்தமான கதை அமைப்பும், மர்மமும் கலந்து இருப்பதால் படம் மிக அருமையாக வந்துள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

பரத், வாணிபோஜன் நடிக்கும் 'மிரள்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியானது | Miral 3

விளம்பரம்

மேலும் இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the video below…

தொடர்புடையவை  லக்கி பாஸ்கர் - திரை விமர்சனம்

விளம்பரம்

Video Courtesy: Think Music

விளம்பரம்

Leave a Comment