விக்ரமின் 58வது படத்தில் ஜோடியாக இணைந்த ‘கேஜிஎஃப்’ ஹீரோயின்!

விக்ரமின் 58வது படத்தில் ஜோடியாக இணைந்த 'கேஜிஎஃப்' ஹீரோயின்! 1

சீயான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அஜய் ஏற்கனவே ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற வெற்றி படங்களைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்காலிகமாக விக்ரம் 58 இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட கெட் அப்களில் நடித்து வருவதால் அவரது மேக்-அப்பில் தனிக்கவனம் செலுத்தப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ – வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் சமீபத்தில் இந்திய அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் இர்பான்பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் அறிவித்தது.இந்த நிலையில் இதில் விக்ரமுக்கு ஜோடியாக, கேஜிஎஃப் பட நாயகி ஸ்ரீ நிதி ஷெட்டி நடிக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்து உள்ளது. இப்படத்தின் மூலம் ஸ்ரீ நிதி ஷெட்டி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 2020′ ல் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment