விக்ரம் படத்தின் டைட்டில் பாடல் வரிகளுடன் தற்போது வெளியாகியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில் படத்துக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது. உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதியுள்ளார்.அடுத்தபடியாக போர்கொண்ட சிங்கம் என்ற பாடலும், wasted lyric என்ற பாடலும் வெளியாகி இருந்தன.
இதில் முதலில் வெளியான “பத்தல பத்தல” பாடல் நடிகர் கமலே எழுதி பாடியும் உள்ளார். இந்த பாடலில் “ஒன்றியத்தின் தப்பலே, ஓனியம் இல்லே இப்பாலே, சாவி இப்போ திருடன் கையில தில்லாலங்கடி தில்லலே” என்ற வரிகள் இடம் பெரும். பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் இந்த வரிகளுக்கு கமல் கடுமையாக விமர்சிக்கபட்டார். அரசியலில் ஜெயிக்க முடியாமல் இப்பொது இங்கு வந்து தன்னுடைய கண்டை கொட்டுகிறார் என பலரும் கலாய்த்தனர்.

பலரும் இது குறித்து விளக்கம் கேட்டு வந்த நிலையில் அவர் அதற்கு சரியாக பதில் அளிக்காமல் மழுப்பி கொண்டே இருந்தார். இப்பொது படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக தனியார் தொலைக்காட்சிக்கு பேசியுள்ள அவர், “ஆம் அது உண்மை தான், போது மக்கள் அதை சரியாக புரிந்து கொண்டனர்” என ஓப்பனாக கூறி பதில் அளித்துள்ளார்.
Video Courtesy – CNN news 18