பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சியில் நடன கலைஞராக இருந்தவர் சாண்டி மாஸ்டர். தற்போது தமிழ் சினாமவில் இருக்கும் முண்ணனி நடன இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கமல் நடிப்பில் உருவாகி நாளை வெளியாகியுள்ள விக்ரம் படத்திற்கு கூட நடன கலைஞராக பணியாற்றியுள்ளார் சாண்டி. மேலும் சென்னையில் நடனப்பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் ஏழைப் பிள்ளைகள் பலருக்கு இலவசமாக நடனம் கற்றுக் கொடுக்கிறார். இவர் 2017ம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வீடியோ கீழே உள்ளது.

இவரது மூத்த மகள் சூசனா, சாண்டி பிக்பாஸில் இருந்தபோது சூசனாவுக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. அதனால் தன் மகளுக்கு எங்கே தனது முகம் மறந்துவிடுமோ என நினைத்து அடிக்கடி அழுவார் சாண்டி, அந்த குழந்தை உள்ளே சென்றபோது சாண்டி அவரை கட்டியணைத்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூசனாவை செல்லமாக லாலா என்றே அழைப்பார் சாண்டி. பிக்பாஸுக்குப் பின்னர் சாண்டியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில்தான் அவருக்கு மகன் பிறந்தான். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் சாண்டி. மேலும் மகனுக்கு பிரபல WWE வீரரான ஷான் மைக்கேல் என்ற பெயரையும் வைத்து இருந்தார்.

சமீபத்தில் லாலவின் 4வது பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடி இருந்தார் சாண்டி. அவரது மகளுடன் சேர்ந்து அவர் செய்யும் குறும்பு வீடியோக்கள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். அந்த வகையில் லாலா குழந்தைகள் விளையாடும் குட்டி வீடு ஒன்றை கட்டியுள்ளார். அதில் சாண்டியை போய் தூங்க சொல்ல, சாண்டியும் அந்த குட்டி வீட்டிற்குள் சென்று தூங்கிவிட்டார். காமெடியாக உள்ள அந்த காணொலியை நீங்களும் பாருங்கள்..Watch the below video..
Video Courtesy: Tamil Viral Videos 24×7