“இது அண்ணாச்சி டைம்’!! ரஜினி, அஜித் பட சாதனைகளை அசால்ட்டாக முறியடித்து முன்னேறும் லெஜெண்ட் பட ட்ரைலர்!!

இப்பொது சமூகவலைத்தளத்தை திறந்தாலே காணப்படும் விஷயம் நம்ப லெஜெண்ட் அண்ணாச்சி தான்.கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்  சரவணா அருள் என்பவர் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து தள்ளினாலும் அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து பெஸ்ட்டு பெஸ்ட்டு என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தி லெஜண்ட் என்று ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்.

"இது அண்ணாச்சி டைம்'!! ரஜினி, அஜித் பட சாதனைகளை அசால்ட்டாக முறியடித்து முன்னேறும் லெஜெண்ட் பட ட்ரைலர்!! 1

விளம்பரம்

இந்த திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது. அதன் பிறகு பாலிவுட் நடிகையை மற்றும் உலக அழகியுமான ஐஸ்வர்யாராயை சரவணன் அந்த படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்துள்ளார். அதற்காக பல கோடிகள் சம்பளம் கொடுக்கப் போவதாக கூறியும் அவர் நேரில் கூட பார்ப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

தொடர்புடையவை  நடிகை ஸ்ரீதேவி பாத் டப்பில் விழுந்து இறக்கவில்லை.! குடும்ப நண்பர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

"இது அண்ணாச்சி டைம்'!! ரஜினி, அஜித் பட சாதனைகளை அசால்ட்டாக முறியடித்து முன்னேறும் லெஜெண்ட் பட ட்ரைலர்!! 3

விளம்பரம்

இந்தப்படத்தில் நடிகை ஊர்வசி ரௌட்டலாவை கதாநாயக பல கோடிகள் கொடுத்து புக் செய்துள்ளார்கள். சமீபத்தில் நடைபெற்ற சரவணா திரைப்படத்தின் ஆடியோ லான்ச் 10 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவானது. மேலும், கிட்டத்தட்ட பத்து நொடிகளுக்கு 6.5 கோடி மேல் பணம் கொடுத்து வர வைக்கப்பட்டதாக  கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லர் தற்போது ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த சாதனை கண்ட பல ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள்.

"இது அண்ணாச்சி டைம்'!! ரஜினி, அஜித் பட சாதனைகளை அசால்ட்டாக முறியடித்து முன்னேறும் லெஜெண்ட் பட ட்ரைலர்!! 5

விளம்பரம்

அது என்னவென்றால் அந்தப் படத்தின் டிரைலர் சுமார் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. மேலும், நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெறும் 24 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வலிமை திரைப்படம் வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது.

"இது அண்ணாச்சி டைம்'!! ரஜினி, அஜித் பட சாதனைகளை அசால்ட்டாக முறியடித்து முன்னேறும் லெஜெண்ட் பட ட்ரைலர்!! 7

விளம்பரம்

இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த ட்ரெய்லர் வெளியாகி ஏழு மாதங்கள் கடந்தும் 16 மில்லியன் பார்வையாளர்கள் தான் பெற்றுள்ளது. இப்படி ஒரு நிலையில் தி லெஜன்ட் படத்தின் டிரைலர் வெளிவந்து 10 நாட்களாகி நிலையில் 26 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றதை கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்கள்.

தொடர்புடையவை  தன் மகன் பெயரில் அடுத்த படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால்.. டீசர் வெளியீடு

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment