உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்திருக்கும் ஒரு படம் என்றால் அது விக்ரம் படம்தான். வெளியான மூன்று நாட்களில் 100 கோடியை தாண்டியுள்ளது படத்தின் வசூல். தற்போது வரை 150 கோடிக்கு மேல் வசூலித்து டாப்பில் உள்ளது. தமிழுக்கு அடுத்தபடியாக கேரளாவில் மட்டும் 15 கோடியே 75லட்சம் வரை வசூலாகியுள்ளது. கமலுக்க கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படமும் வெளிவரவில்லை. கடைசியாக வெளியான சில படங்களும் சரியாக ஓடவில்லை. எனவே விக்ரம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடியிருந்த நிலையில் படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது. வீடியோ கீழே உள்ளது

இதற்காக லோகேஷை பாராட்டி கமல் எழுதியிருந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கு பதில் அளித்திருந்த லோகேஷ் இது தனக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்று பதிலளித்து இருந்தார். விக்ரம் படம் உலகம் முழுவதும் மக்களிடையே நல்ல வரபேற்பை பெற்றுள்ளது. இதை கமல் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. படத்தின் ப்ரோமஷனுக்காக சூப்பர் சிங்கருங்கு சென்ற போது கூட கமல் விளையாட்டாக, இவங்க குடுக்குற ரவுச பார்த்தா கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று கூட கூறியிருந்தார். இதனால் கமல் ரொம்ப எமோஷனலாக இருப்பதாக கூறப்படுகிறது. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ கூட வெளியிட்டுள்ளார்.
Thank you so much Aandavarey @ikamalhaasan 🙏🏻 ❤️❤️❤️ pic.twitter.com/h2qZjWKApm
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 7, 2022
சிலர் கமலின் படம் 4 ஆண்டுகளாக வராததால் கமலின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக கூறி வந்தனர். ஆனால் அது போன்று எதுவும் இல்லை அவர் இன்னும் மாஸ் தான் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்து விட்டதாலும், சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தியதாலும் லோகேஷுக்கு “லெக்சஸ்” என்ற சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து நன்றி ஆண்டவரே என ட்வீட் செய்துள்ளார் லோகேஷ். இதன் குறைந்த விலை 60 லட்சத்தில் தொடங்கி இரண்டரை கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும், Watch the below Video..
Video Embed Credits: Cineulagam