ரஜினி சாருக்காக நிறைய தடவ டேபிள் சுத்தம் பண்ணி இருக்கேன்..சூப்பர் ஸ்டார் பற்றி நெகிழ்ந்து பேசிய வெங்கடேஷ் பட்

சின்னத்திரையை பொறுத்தவரை சீரியல்கள் மட்டுமே என்று இருந்த காலம் போய் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மனத்தில் மிக பிரபலம் ஆகிவிட்டன. அந்த வகையில் மக்களை மகிழ்வித்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி பார்க்கின்றனர். பலருக்கும் Stress Buster ஆக இருக்கிறது இந்த நிகழ்ச்சி. இரண்டு சீசன்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. லாக் டவுன் சமயத்தில் பலரும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் பார்த்து தங்களது மன அழுத்தத்தை போக்கி கொண்டனர். தற்போது இது மூன்றாவது சீசனை வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ப்ரோமோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து விடுவது வழக்கம். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

ரஜினி சாருக்காக நிறைய தடவ டேபிள் சுத்தம் பண்ணி இருக்கேன்..சூப்பர் ஸ்டார் பற்றி நெகிழ்ந்து பேசிய வெங்கடேஷ் பட் 1

விளம்பரம்

 

சில சமயங்களில் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் சில விஷயங்கள் சர்ச்சையாவது உண்டு. சமீபத்தில் குத் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து மன அழுத்தம் குறைந்து செயற்கை கருத்தரிப்பு மூலம் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்று வெங்கடேஷ் பட் கூறினார். இதை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து தள்ளினர். பல சர்ச்சைகளுக்குப் பிறகு இது ஓய்ந்தது. தற்போது மீண்டும் ஒரு செய்தியை பட் கூற அதுவும் வைரலாகி வருகிறது. ஆனால் இது சர்ச்சை கருத்து அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியது. 1993ம் ஆண்டு பட் ஒரு ஹோட்டலில் Trainee ஆக வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது சூப்பர் ஸ்டார் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவது வழக்கம். ட்ரைனிங்கில் இருக்கும் போது சமைப்பது தவிர வெயிட்டர் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும். அப்போது சூப்பர் ஸ்டார் அவர்களின் டேபிளை தான் பல முறை சுத்தம் செய்துள்ளதாக கூறினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ரோகிணி அம்மாவாகியதாக தவறாக புரிந்துகொண்ட மீனா..! கடுப்பாகி எச்சரித்த ரோகிணி..! சிறகடிக்க ஆசை ப்ரோமோ..!

ரஜினி சாருக்காக நிறைய தடவ டேபிள் சுத்தம் பண்ணி இருக்கேன்..சூப்பர் ஸ்டார் பற்றி நெகிழ்ந்து பேசிய வெங்கடேஷ் பட் 3

ஒரு நாள் பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் தங்களது 50வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய போது, அருகில் இருந்த ரஜினிகாந்தையும் அழைக்க விரும்பினர். ஆனால் வெயிட்டர் ஒருவர் ரஜினி சாரை தொந்தரவு செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். இதனை தெரிந்து கொண்ட ரஜினி தானே எழுந்து சென்று அவர்களை வாழ்த்திவிட்டு கேக் சாப்பிட்டு புகைப்படமும் எடுத்துவிட்டு வந்தார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். ஒவ்வொரு முறையும் ரஜினி தன்னை கேமிராவுக்கு வெளியே சாதாரண மனிதனாக காட்டிக் கொள்கிறார். சிறந்த Human Being என்று ரஜினியை பாராட்டினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the Below Video…

விளம்பரம்

Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment