“மாட்டிக்கிட்ட பங்கு”!!எகிப்தின் பாடலை சுட்டு விக்ரம் டைட்டில் பாடலை ரெடி செய்துள்ள அனிருத்!!

கடந்த வெள்ளியன்று வெளியான விக்ரம் படம் தான் கடந்த ஒரு மாத காலமாக ரசிகர்களின் அதிக கவனத்தை கொண்டுள்ளது. 4 வருடங்கள் பிறகு நடிக்கும் கமல், அதுவும் அவர் நீண்ட நாட்களாக நடித்திராத ஆக்ஷன் கதாபாத்திரம், அதுபோக படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் சிறந்த நாடியிப்பு, மேலும் சிறப்பு தோற்றத்தில் கடைசி 5 நிமிடங்களில் வந்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த சூர்யா, இயக்குனர் லோகேஷின் நேர்த்தியான கதைக்களம், கிரிஷ் கங்காதரனின் சிறப்பான காட்சி அமைப்பு என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்து படம் இரண்டே நாட்களில் 100 கோடியை தாண்டி பல சாதனைகளை செய்து சிறப்பாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

"மாட்டிக்கிட்ட பங்கு"!!எகிப்தின் பாடலை சுட்டு விக்ரம் டைட்டில் பாடலை ரெடி செய்துள்ள அனிருத்!! 1

விளம்பரம்

படத்திற்கு முக்கிய பலமாக இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை இருந்தது. தனி தனியே கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என முக்கிய பாத்திரங்கள் அனைவருக்கும் வெவ்வேறு மாதிரியான இசையை கொடுத்து படம் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தார். படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் கதையுடன் ஒன்றி வரும் 3 பாடல்களும் “போர்க் கண்ட சிங்கம், நாயகன் மீண்டும் வரான், Once upon a time there lived a ghost” என மூன்றுமே படம் வெளியாவதற்கு முன்பே சக்கை போடு போட்டது.

தொடர்புடையவை  விவேக் நடிக்கும் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்!

"மாட்டிக்கிட்ட பங்கு"!!எகிப்தின் பாடலை சுட்டு விக்ரம் டைட்டில் பாடலை ரெடி செய்துள்ள அனிருத்!! 3

விளம்பரம்

இளம் வயதிலேயே இசையமைப்பாளராக நடிகர் தனுஷின் “3” படத்தில் அறிமுகமான அனிருத், முதல் படத்திலேயே உலகளவில் பேசப்பட்ட “why this kolaveri” பாடலை கொடுத்தார். பின்னர் தமிழில் உள்ள முக்கிய நாயகர்கள் பலருடன் பணியாற்றியுள்ளார். இவருடைய கூட்டணியில் இன்னும் சேராமல் இருப்பவர்கள் நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு மட்டுமே. சிம்புவுடன் “Beep Song” மற்றும் விக்ரமுடன் “ஐ” படத்தில் “மெர்சலாயிட்டேன்” போன்ற பாடல்களில் பணியாற்றினாலும் அது ஒரு பாடல் மட்டுமே. முழு நீல படம் ஒன்றில் இருவருடனும் இவர் இன்னும் பணியாற்றவில்லை.

இந்த வருடம் துவங்கிய 6 மாதங்களில் மட்டுமே 4 முன்னணி நாயகர்கள் படத்திற்கு இவர் இசைமைத்துள்ளார். நடிகர் விஜயின் “பீஸ்ட்”, சிவகார்த்திகேயனின் “டான்”, விஜய்சேதுபதியின் “காத்துவக்குல 2 காதல்” மற்றும் கமலின் “விக்ரம்” என 4 பாடங்களும் பாடலிற்காக சிறப்பாக பேசப்பட்டவையே. இன்னும் இந்த ஆண்டிலேயே ரஜினி, 5 ஆண்டுகள் பிறகு தனுஷ், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் நடிகர் ஷாருக்கான்-அட்லீ கூட்டணியில் வெளியாக இருக்கும் “ஜவான்’ என 4 பெரிய படங்களை கையில் வைத்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியல்! நம்ம அனுஷ்கா அதுல இருக்காங்களா!!

"மாட்டிக்கிட்ட பங்கு"!!எகிப்தின் பாடலை சுட்டு விக்ரம் டைட்டில் பாடலை ரெடி செய்துள்ள அனிருத்!! 5

இவ்வாறு இருக்க, இப்போது கமலின் விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள “நாயகன் மீண்டும் வாரான்” பாடல், 4 ஆண்டுகள் முன்பே எகிப்து நாட்டில் வெளியான ஒரு இசை ஆல்பம் என்பதை ரசிகர்கள் இப்பொது கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பம் இரண்டு பாடலிலும் ஒன்றாகவே உள்ளது. பின்னர் போக்கில் அனிருத் சிறப்பாக மாற்றி இசையமைத்து கொடுத்துள்ளார். 2017 ஆண்டு வெளியான Amunet(the hidden one) என்ற அந்த பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Video Courtesy – Peter Gundry.

விளம்பரம்

Video Courtesy -SonyMusicSouth

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment