ரொம்ப நன்றி தம்பி..! சூர்யாவுக்கு 46 லட்சம் மதிப்பில் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த அண்ணன் கமல்..!

நேற்று லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளித்து இருந்த நிலையில் தற்போது கமல் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்திருக்கும் ஒரு படம் என்றால் அது விக்ரம் படம்தான். வெளியான மூன்று நாட்களில் 100 கோடியை தாண்டியுள்ளது படத்தின் வசூல்.

ரொம்ப நன்றி தம்பி..! சூர்யாவுக்கு 46 லட்சம் மதிப்பில் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த அண்ணன் கமல்..! 1

விளம்பரம்

தற்போது வரை 150 கோடிக்கு மேல் வசூலித்து டாப்பில் உள்ளது. தமிழுக்கு அடுத்தபடியாக கேரளாவில் மட்டும் 15 கோடியே 75லட்சம் வரை வசூலாகியுள்ளது. கமலுக்க கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படமும் வெளிவரவில்லை. கடைசியாக வெளியான சில படங்களும் சரியாக ஓடவில்லை. எனவே விக்ரம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடியிருந்த நிலையில் படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது.

ரொம்ப நன்றி தம்பி..! சூர்யாவுக்கு 46 லட்சம் மதிப்பில் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த அண்ணன் கமல்..! 3

விளம்பரம்

கமலின் படம் 4 ஆண்டுகளாக வராததால் கமலின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக கூறி வந்தனர். ஆனால் அது போன்று எதுவும் இல்லை அவர் இன்னும் மாஸ் தான் என்பதை லோகேஷ் கனகராஜ் நிரூபித்து விட்டதாலும், சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தியதாலும் லோகேஷுக்கு “லெக்சஸ்” என்ற சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல். இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து நன்றி ஆண்டவரே என ட்வீட் செய்துள்ளார் லோகேஷ். இதன் குறைந்த விலை 60 லட்சத்தில் தொடங்கி இரண்டரை கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடையவை  கமல் குரலில் "யாரோ இவன் யாரோ" பாடல் மெய்யழகன் படத்தில் இருந்து வெளியாகியது..!

ரொம்ப நன்றி தம்பி..! சூர்யாவுக்கு 46 லட்சம் மதிப்பில் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த அண்ணன் கமல்..! 5

விளம்பரம்

இந்த நிலையில் படத்துக்காக ஒரு ருபாய் கூட சம்பளம் வாங்காமல் அன்புக்காக மட்டுமே தம்பி சூரியா நடித்து இருந்தார் என்று என்று கமல் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார். இன்று சூர்யாவை நேரில் சந்தித்த இருந்தனர் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ்.அப்போது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் ரக வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல். இதன் விலை 46 லட்சம் என்று கூறப்படுகிறது .

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment