“வாழ்த்துக்கள் Mr. & Mrs. நயன்தாரா விக்னேஷ் சிவன்”!! பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த விக்னேஷ் நயன் திருமணம்!!

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகள் மேல் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளிலுள்ள முக்கிய நாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இப்போது ஹிந்தியில் ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” படத்தின் மூலம் அங்கும் அறிமுகமாக உள்ளார். 35 வயதை தாண்டிய அவருக்கு எப்போது திருமணம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

"வாழ்த்துக்கள் Mr. & Mrs. நயன்தாரா விக்னேஷ் சிவன்"!! பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த விக்னேஷ் நயன் திருமணம்!! 1

விளம்பரம்

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அவர்களின் காதல் தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.9 ஆம் தேதியான நாளை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிப்புரத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருப்பதியில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் 150 பேர் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி மறுத்தது.

தொடர்புடையவை  "அடிச்ச பம்பர் ஆஃபர் ...குக் வித் கோமாளியை விட்டு கிளம்பும் ரக்ஷன்"!!

"வாழ்த்துக்கள் Mr. & Mrs. நயன்தாரா விக்னேஷ் சிவன்"!! பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த விக்னேஷ் நயன் திருமணம்!! 3

விளம்பரம்

இதனால் திருமணத்தை மகாபலிப்புரத்தில் நடத்த விக்கி நயன் ஜோடி முடிவு செய்தது.தங்களின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட 200 பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திருமணத்தை ஒளிபரப்ப ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்

"வாழ்த்துக்கள் Mr. & Mrs. நயன்தாரா விக்னேஷ் சிவன்"!! பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த விக்னேஷ் நயன் திருமணம்!! 5

விளம்பரம்

பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சமும் அனுமதி இல்லாத இந்த நிகழ்வில், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். திருமண விழாவை சிறப்பிக்க நடிகர்கள் ரஜினி, கார்த்தி, ஷாருக் கான், வசந்த்ரவி, தயாரிப்பாளர் போனி கபூர், தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம், முதலானோர் கலந்து கொண்டனர்.

"வாழ்த்துக்கள் Mr. & Mrs. நயன்தாரா விக்னேஷ் சிவன்"!! பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த விக்னேஷ் நயன் திருமணம்!! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment