
தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடிகள் விக்னேஷ் நயன்தரவின் ஏழு வருடங்கள் காதலுக்குப் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் நயன்தாரா, இவரது இயற்பெயர் டயானா குரியன் படங்களில் நடக்க தொடங்கிய பின்பு நயன்தாரா என்று பெயரை மாற்றிக் கொண்டார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தமிழில் 2005ம் ஆண்டு ஐயா படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தனது கடினமான உழைப்பாலும், நடிப்பு திறமையாலும் இன்று லேடி சூப்பர் ஸ்டார் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.
இன்று முடிந்துள்ள அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.நீண்ட காலமாக ரசிகர்கள் பலரும் இவர்களது திருமணத்திற்காக காத்து இருந்தனர்.

இன்று சென்னையை அடுத்த மஹாபலிபுரத்திலுள்ள ஒரு தனியார் ரெசோர்டில் இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

மிகவும் கெடுபிடிகளுடன் இவர்களது திருமண ஒரு பிரைவேட் நிகழ்ச்சியாக உதவியலாளர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி, கார்த்தி, போனி கபூர், திவ்யதர்ஷினி, வசந்த்ரவி, ஷாருக் கான், அட்லீ, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹமான், திலீப் முதலானோர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
