கமலை பார்த்து திருந்துங்க என்று ரஜினியை இணையவாசிகள் கலாய்த்து வருவது தற்போது சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் ரஜினி மற்றும் கமலஹாசன். இருவரும் 80களில் நடிக்கத் தொடங்கி இன்றளவும் திரைத்துறையில் முண்ணனி நடிகர்களாக கலக்கி வருகின்றனர். 1975ம் ஆண்டு ஆபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் ரஜினிகாந்த். கர்நாடக மாநிலத்தில் பஸ் நடத்துனராக வேலை பார்த்து வந்த ரஜினிகாந்த் தனது அயராத உழைப்பு மற்றும் நடிப்புத் திறமையால் இன்று தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார். திரைத்துறையில் 50 வருடங்களை கடந்த பிறகும் இன்றளவும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார்.

அவருக்கு நேர் நிகராக இருந்தவர் கமலஹாசன் அவர்கள். இவர் 1960ம் ஆண்டில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கலை உலகில் உலகநாயகனாக வலம் வருகிறார். உச்ச நட்சத்திரங்களாக இருந்த போதிலும் ஈகோ காட்டாமல் கமலும், ரஜினியும் இணைந்து பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளன. இவர்களுக்குப் பின்னர் வந்த முண்ணனி நடிகர்கள் இது போல ஒரே படத்தில் இணைந்து நடப்பதை குறைத்துக் கொண்டனர். நாளடைவில் இந்த கான்செப்ட் சுருங்கி இல்லாமலேயே போனது.

ஆனால் தற்போது வெளியான விக்ரம் படம் சற்று வித்தியாசமானது. முண்ணனி நடிகர்களான கமல், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்ற நான்கு முக்கிய முண்ணனி நடிகர்கள் ஒரே படத்தில் நடித்து அசத்தியிருந்தனர். படம் ப்ளாக் பஸ்டராக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலில் உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் கமலுக்கு ஜோடியாக ஹீரோயின் இல்லை. இந்த விஷயம்தான் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதை மேற்கோள் காட்டி ரஜினியை கலாய்த்து வருகின்றனர் இணையவாசிகள். 70 வயது ஆன பின்பும் ஹீரோயின்களுடன் நடனம் ஆடுகிறார், ரொமான்ஸ் செய்கிறார் என்று ஏற்கனவே மீம் போட்டு கலாய்த்து வந்தனர்.

சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக வைத்து நடித்த போதே இது போன்ற சர்ச்சைகள் கிளம்பியது. தற்போது நெல்சன் இயக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்கதாக தகவல்கள் வெளியான நிலையில் மீண்டும் ரஜினியை கலாய்க்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். ரஜினி கமலைப் பார்த்து திருந்த வேண்டும், ஹீரோயின் இல்லாமல் நடித்து பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்துள்ள விக்ரம் படத்தை முன்மாதிரியாக கொண்டு இது போன்ற படங்களில் ரஜினி நடிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற படங்களில் நடித்தால்தான் ரஜினி படங்கள் ஓடும். 70 வயதான பின்பும் இளம் வயது கதாநாயகிகளிடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதை ரஜினி கைவிட வேண்டும் என்றெல்லாம் அவரை கலாய்த்து மீம் போட்டு வருகின்றனர்.