ஜீன் 3ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது விக்ரம் திரைப்படம். வார நாட்கள், வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு என இரவு காட்சிகள் உட்பட ஹவுஸ் ஃபுல் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது விக்ரம் திரைப்படம். நேற்றும் இன்றும் படத்தின் வசூல் எகிறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் 2. இந்த படம் 2018ம் ஆண்டில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. பின்னர. கொரோனா பாதிப்பால் கமல் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் வெளியாகி விக்ரம் படம் சக்கை போடு போட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளாக படம் இல்லாததால் கமலின் சினிமா வாழ்வு முடந்துவிட்டது என்று சிலர் விமர்சித்து இருந்த நிலையில் விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளார் கமல்.

படத்தின் வெற்றியால் ஏகத்தும் குஷியாக இருக்கிறார் கமல். படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் ரக சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார். மற்றும் படத்தில் பணிபுரிந்த 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்குகளை பரிசளித்தார். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்ற நடிகர் சூர்யாவின் வீட்டிற்கே சென்று விலை மதிப்பு மிக்க ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்தார். தற்போது படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா தொடங்கி உலக அளவில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது விக்ரம் படம்.
#Vikram $2.425 Million in USA 🇺🇸
— Ramesh Bala (@rameshlaus) June 12, 2022
தமிழகத்தில் 110 கோடிக்கும் அதிகமான வசூலையும், கேரளாவில் 25 கோடி, ஆந்திரா தெலுங்கானா 22 கோடி, கர்நாடகாவில் 17 கோடி, அமெரிக்காவில் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மொத்தம் 300 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது விக்ரம் படம். இன்று வார இறுதிநாள் என்பதால் இன்றைய வசூலையும் சேர்த்து வசூல் 300 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. 67 வயதில் விஜய் அஜீத் செய்யாத சாதனையை கமல் செய்துள்ளதாக கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
TN 2022 Top 3 Grossers till now..
1. #Valimai
2. #KGFChapter2
3. #Vikram
— Ramesh Bala (@rameshlaus) June 11, 2022