மசூதில போட்டோஷூட் பண்ணுவியா? திருப்பதி என்ன சர்ச்-ஆ செருப்போட உள்ள போக? நயன்தாராவை திட்டித்தீர்த்த இந்து கட்சி

திருப்பதி தேவஸ்தானத்தில் விதிகளை மீறி செருப்பு அணிந்து சென்று போட்டோஷூட் நடத்தியதால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை இந்து தமிழ் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஆந்திரா சென்று இருந்தனர். காலை நடைபெற்ற ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட இருவரும் கோவிலுக்குள் காலணி அணிந்து நடமாட அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்கு வந்தனர். மேலும் அந்த வளாகத்திற்குள் போட்டோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் சேர்ந்து போட்டோ ஷூட்டே நடத்தி உள்ளனர். இது கடும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

மசூதில போட்டோஷூட் பண்ணுவியா? திருப்பதி என்ன சர்ச்-ஆ செருப்போட உள்ள போக? நயன்தாராவை திட்டித்தீர்த்த இந்து கட்சி 1

விளம்பரம்

இது பற்றி அறிந்த தேவஸ்தான உயரதிகாரிகள் இந்த தவறு நடைபெற காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கூறுகையில், ஏழுமலையான் திருக்கோவிலின் சில இடங்களில் காலணி அணிந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது, அதன்படி மாட வீதிகள், கோவிலின் முன்புறம், லட்டு விற்பனை செய்யும் இடங்கள், திருக்கோவில் குளம் போன்ற இடங்கள் காலணி அணிந்து செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறினார். மேலும் இது போன்ற திருமண போட்டோஷூட்டுக்கள் நடத்த அனுமதி இல்லை என்றும், அதிகாரிகளின் கவனக் குறைவால் இந்த தவறுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடையவை  ஸ்ரேயா கோஷல் மேம்..எப்படி இந்த பாட்டை பாடுனீங்க? ஷ்ரேயாவின் பாடலை அப்படியே பாடி காட்டிய சிவாங்கி

மசூதில போட்டோஷூட் பண்ணுவியா? திருப்பதி என்ன சர்ச்-ஆ செருப்போட உள்ள போக? நயன்தாராவை திட்டித்தீர்த்த இந்து கட்சி 3

விளம்பரம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செயல் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு தகுந்த விசாரணை நடத்தவும், கவனக் குறைவாக இருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தான உயரதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் தாங்கள் செய்தது தவறு என்றும், அதற்காக வருத்தப்படுவதாகவும் மன்னிப்பு கடிதம் ஒன்றை அளித்தார். ஆனால் இன்று இந்து தமிழ் கட்சியின் தலைவர் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் நயன்தாராவை கடுமையாக சாடி இருந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டவர்கள் கூட காலில் செருப்பில்லாமல் வருகிறார்கள். ஆனால் திருப்பதி சென்ற இவர்கள் எதற்கு காலில் செருப்புடன் சென்றார்கள் இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மசூதில போட்டோஷூட் பண்ணுவியா? திருப்பதி என்ன சர்ச்-ஆ செருப்போட உள்ள போக? நயன்தாராவை திட்டித்தீர்த்த இந்து கட்சி 5

விளம்பரம்

மேலும் திருப்பதி ஒன்றும் சர்ச் இல்லை செருப்பணிந்து செல்வதற்கு, இன்று நயன்தாராவை விட்டால் நாளை மற்ற தடிகை ஷூ போட்டு செல்வார் அதனால் நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாரா? மீண்டும் ஒரு போதும் இதை அனுமதிக்க முடியாது என்றும், கோவிலுக்கு செல்பவர்கள் செருப்பணிந்து செல்லக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா என்றும் அவர் நயன்தாராவை கடுமையாக சாடினார்.

விளம்பரம்

Leave a Comment