தமிழின் முண்ணனி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது இசையமைப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே டார்லிங், சிகப்பு மஞ்சள் பச்சை, த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பேச்சுலர். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்தது. இவர் நடித்த படங்கள் எப்போதுமே எதிர்மறை விமர்சனங்களைப் பெறுவது வழக்கம். தற்போது ஐங்கரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குனர் சீனுசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு வைரமுத்து இசையமைக்கிறார். எப்போதும் கிராமத்து பிண்ணனியை மையமாக கொண்டு படம் எடுக்கும் சீனு ராமசாமி இந்த படத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.

படம் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படம் ஜூன் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி. பிரகாஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. லுங்கி அணிந்து கையில் கத்தியோடு உள்ள அந்த படத்தின் போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Happy to launch @Seenuramasamy's #Idimuzhakkam FIRST LOOK
Produced by@Kalaimagan20 @mu_fathima @SkymanFilms
VetriThamizhan @gvprakash@SGayathrie #SaranyaPonvannan @Actor_ArulDass @soundar4uall @NRRaghunanthan @ARASHOKKUMAR05 @premartdirector @thamizh_editor @Vairamuthu pic.twitter.com/pUerPSid0c
— Udhay (@Udhaystalin) June 13, 2022