தளபதி 64 படத்தில் விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலா?

தளபதி 64 படத்தில் விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலா? 1

பிகில் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் உருவாக்குகிறது தளபதி 64. இன்னும், இந்த படத்திற்கு டைட்டில் வைக்கவில்லை, இந்த நிலையில், இப்படத்தை கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய
லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.இந்த நிலையில், இப்படத்தில், விஜய் ஒரு கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகவே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார்.

மேலும், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சென்ற 15 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு வட சென்னை நடந்து முடிந்தது. இதையடுத்து படக்குழுவினர் ஆக்‌ஷன் காட்சிக்காக, டெல்லி செல்ல இருக்கின்றனர். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சேவியர் பிரிட்டோ, எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.

விளம்பரம்

வரும் 2020 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த மாநகரம் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி வெளியாகி உள்ளது . அடுத்து வெளியாகவுள்ள கைதி படமும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை உருகருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இதே பாணியில்தான் விஜய்யின், தளபதி64 படமும் உருவாக்கப்படுவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

தொடர்புடையவை  சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் பிரபல தமிழ் நடிகர்..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!

வரும் 25 ஆம் தேதி விஜய் – அட்லி காம்பினேஷனில் உருவாக்கப்பட்டுள்ள பிகில் படம் வெளியாக இருக்கிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், விஜய், ராயப்பன், மைக்கேல் மற்றும் பிகில் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment