“அம்மாவின் கட்டாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?”!!சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!!

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சர்ச்சைகளுக்கு பேர் போனவராக இருந்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. தன்னுடைய அம்மாவுடன் பிரச்னையில் துவங்கி கடைசியாக தன் தோழி நக்ஷத்ரா சித்ரவதை செய்வதாக கூறும் வரை அனைத்துமே பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. குறிப்பாக நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டார், “எப்படியாவது என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்” என பேசியதெல்லாம் சிம்பு ரசிகர்களை தாண்டி அனைவருக்குமே கொஞ்சம் மனக்கசப்பை கொடுத்தது. எதற்காக இவர் இப்படி தொடர்ந்து பேசி வருகிறார் என யாருக்கும் தெரியாத சூழ்நிலை இருந்தது.

"அம்மாவின் கட்டாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?"!!சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!! 1

விளம்பரம்

சின்னத்திரை பிரபல தொடரான “யாரடி நீ மோகினி” தொடரில் ஹீரோவின் தங்கையாக துணை நடிகையாக நடிக்க துவங்கியவர் நடிகர் ஸ்ரீநிதி. அந்த தொடரில் நடித்த மற்ற முக்கிய நாயகிகளாக நக்ஷத்ரா மற்றும் சைத்ரா ரெட்டி என இவர்கள் மூவருக்கும் இந்த தொடரின் மூலம் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

"அம்மாவின் கட்டாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?"!!சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!! 3

விளம்பரம்

நடிகை நக்ஷத்ரா இந்த தொடர் முடிந்தவுடன் இப்பொது வேறொரு சேனலில் ஒளிபரப்பாகும் “வள்ளி திருமணம்” தொடரில் நடிக்க சென்று விட்டார். அதே போல அண்மையில் திருமண ஆனா நடிகை சைத்ராவும் நடுவில் அஜித் குமாருடன் ” வலிமை” படத்தில் நடித்திருந்தார். படம் வெளியான போது, படம் பார்த்து விட்டு ஸ்ரீநிதி பேசிய பேச்சு அஜித் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. பின்னர் அதற்கு அழுது கொண்டே இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கோரினார். சைத்ரா இப்போது “கயல்” என்னும் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  ஏலியன்னு சொல்லி ஆக்டோபஸ காட்றாங்க.! உக்கார முடில..தூங்கிட்டேன்..கேப்டன் படத்தை கழுவி ஊற்றிய பொதுமக்கள்

ஸ்ரீநிதிக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைத்த சில சின்ன சின்ன கதாபத்திரங்களில் பல தொடர்களில் நடித்து வந்து கொண்டிருந்தார். இன்ஸ்டகிராமிலும் இவருக்கு நல்ல ஃபலோவ்ர்ஸ் உண்டு. அவ்வப்போது போட்டோக்களும், விடீயோக்களும் வெளியிட்டு வந்தார். திடீரென இவருடைய அம்மா ஒரு நாள் இவரை திட்டும் வீடியோ ஒன்று வெளியானது. அது முதலே நடிகை ஸ்ரீநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன.

விளம்பரம்

"அம்மாவின் கட்டாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?"!!சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!! 5

ஒரு நாள் நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாகவும், அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் எனவும், அவரின் வீட்டின் முன் அலப்பறை செய்து வீடியோ வெளியிட்டார். சிறுது நாட்களிலேயே இவருடைய அம்மா மீண்டும் இவரை திட்டும் வீடியோ வெளியானது. பின்னர் சிம்பு பிரச்சனை, நடுவில் கடந்த ஆண்டு மரணமடைந்த நடிகை சித்ராவை குறிப்பிட்டு தன்னுடைய தோழி நக்ஷத்திரவும் இது போல் ஆகி விட வாய்ப்புகள் உண்டு, அவரும் சிக்கலில் உள்ளார் என பல்வேறான விடியோக்களை வெளியிட்டு வந்தார்.

விளம்பரம்

"அம்மாவின் கட்டாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?"!!சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!! 7

சமீபத்தில் இவர் தனக்கு நடந்தவை குறித்து மனந்திறந்து பேசியிருந்தார். அந்த பேட்டியில் எல்லோரும் ஏமாத்ததான் பாக்குறாங்க, ஒரு சேனல் எம்.டி. வாய்ப்புக்காக ரூமுக்கு வர சொன்னார் என பல்வேறு வகையிலான விஷயங்கள் குறித்தும் பேசியிருந்தார். இப்போதும் அந்த பேட்டி வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே, தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விட்டார் போலும். மீண்டும் தான் வீட்டில் “ஹோம் டூர்” ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்துள்ளார். அதில் கொஞ்சம் மகிழ்சியாகவும், அம்மாவுடனும் சேர்ந்தே காணப்படுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.! மன்சூர் அலிகானை வன்மையாக கண்டித்த தென்னிந்திய நடிகர் சங்கம்.!

"அம்மாவின் கட்டாயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?"!!சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!! 9

அந்த பேட்டியில் கூட தான் முன்னர் கொஞ்சம் மனஅழுத்தத்துடன் இருந்ததாகவும், இப்பொது அது போல எதுவும் இல்லை, நான் என் அம்மாவோடு நலமாக இருக்கிறேன் என சிரித்தபடியே கூறியிருந்தார். இருந்தாலும் அவர் உண்மையில் மிகவும் மனஅழுத்தத்துடன் தான் இருக்கிறார் எனவும், அதற்காக அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல அவருடைய தாயார் முயன்று வருவதாகவும் கூறப்பட்டது.  இந்நிலையில் சென்னையை அடுத்த ஒரு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதியைக் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளதாக சிலர் செய்திகள் பரப்பி வருகிறார்கள்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment