சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் கஷ்டப்பட்டு சுயதொழில் செய்யும் நடிகர் கிஷோர்..என்ன தொழில்ன்னு பாருங்க

தமிழ் சினிமாவில் பலர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று இருந்த போதிலும் முண்ணனி நடிகர்களைப் போல அவர்களால் சினிமா துறையில் தாக்கு பிடிக்க முடிவதில்லை. சினிமாவில் இருந்து விலகி ஏதாவது ஒரு சுய தொழில் செய்வார்கள் அப்படி ஒருவர்தான் பல படங்களில் வில்லனாக நடித்த கிஷோர். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 2007ம் ஆண்டு வெளிவந்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு சிறந்த வில்லன் என்ற விருதையும் பெற்றுள்ளார். அதன் பின்னர் ஜெயங்கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு, ஆடுகளம், கபாலி, ஹரிதாஸ் போன்ற நிறைய படங்களில் நடித்துள்ளார். கீழே உள்ள வீடியோவே பார்க்கவும்.

சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் கஷ்டப்பட்டு சுயதொழில் செய்யும் நடிகர் கிஷோர்..என்ன தொழில்ன்னு பாருங்க 1

விளம்பரம்

கிஷோரின் சொந்த ஊர் கர்நாடகா ஆகும். இவரின் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்ததால் இவரும் நடிப்பை தாண்டி சுய தொழில் செய்து வருகின்றனர். அதனால் இவரும் கர்நாடாகவில் உள்ள அவரது வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய பண்ணை வீட்டில் மா, பலா, வாழை, தென்னை போன்ற பல மரங்களை வளர்த்து வருகிறார். இந்த விவசாயத் தொழில் சாதாரணமானது இல்லை மிகவும் கஷ்டம் என்று கூறிய அவர், நேற்று கூட இரண்டு யானைகள் வந்து தென்னை மரங்களை பிய்த்து போட்டுவிட்டதாக கூறினார். இதனால் யானைகளை விரட்ட தேனீக்கள் வளர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையவை  லானே தங்கலானே..! தங்கலான் படத்தின் War பாடல் Video வெளியாகியது..!

சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் கஷ்டப்பட்டு சுயதொழில் செய்யும் நடிகர் கிஷோர்..என்ன தொழில்ன்னு பாருங்க 3

விளம்பரம்

விவசாயம் அழிந்துவிட்டால் நாம் எதிர்காலத்தில் உணவுக்கு மிகுந்த கஷ்டப்படுவோம் என்று கூறும் கிஷோர், தனது குடும்பத்துடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி குழந்தைகள் அவருடன் இணைந்து விவசாயம் செய்து வருகின்றனர். பொழுது போக்கிற்காக மட்டும் விவசாயம் செய்யாமல், இந்த பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தனது குழந்தைகளுக்கும் விவசாயம் சொல்லி கொடுத்து வருவதாக பெருமிதத்துடன் கூறினார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Indiaglitz

விளம்பரம்

Leave a Comment