விஜய் நடிக்கும் வம்சி படத்தின் 3வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் தளபதி. இன்று காலை அவர் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியான நிலையில் தற்போது 3வது போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார் நடிகர் விஜய். இவர் இவரது தந்தை இயக்கத்தில் 1992ம் ஆண்டில் வெளியான படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். பின்னர் கடுமையான உழைப்பு மற்றும் நடிப்புத் திறமையால் இன்று இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையில்லை.
#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022
இன்று விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நல உதவிகளெ பொது மக்களுக்கு செய்து வருகின்றனர். விஜய் தற்போது கைவசம் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படமும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நேற்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படமான தளபதி 66 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. கோர்ட் சூட்டுடன் விஜய் அமர்ந்திருப்பது போலவும், பின்னாடி கண்ணாடிகளால் ஆன அறை போலவும் இருந்தது. படத்தின் பெயர் வாரிசு என்று அறிவிக்கப்பட தளபதி ரசிகர்கள் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து கொண்டாடி வந்தனர்.
#VarisuSecondLook pic.twitter.com/q1TZeuU9LW
— Vijay (@actorvijay) June 22, 2022
இன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று காலை அவர் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியான நிலையில் தற்போது 3வது போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை பலரும் தங்கள் சோய்க்கால் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

#VarisuThirdLook pic.twitter.com/xgMg7pVSyg
— Vijay (@actorvijay) June 22, 2022