இந்திய வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கும் நாடு. பல்வேறு வகையிலான பிரிவினைகளை இந்திய மக்களுள் பலரும் வேரூன்ற முயற்சித்தும், எப்போதும் அதுவே இந்தியாவை உலக நாடுகள் முன் தனித்துவமான நாடாக காண்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிடமும் இருந்து தமிழம் தனித்து நிற்க நிறையவே விஷயங்கள் உள்ளன. அதில் முக்க்கியமான ஒன்று பெயரிற்கு பின் தங்களுடைய ஜாதியை சேர்த்து பெயர் வைப்பது. தமிழகத்தில் அந்த முறை இருந்தும் பெரியாருக்கு பின், முற்றிலுமாக நம்முடைய தமிழகம் அந்த ஒரு தீய வழக்கத்தை மாற்றியது.

ஆனால் வெளிமாநிலங்கிலும் இன்னமும் தங்கள் பெயரின் பின்னால், ஜாதி பெயரை வைப்பதை வழக்காமாகவே கொண்டுள்ளனர். ஆனால் இங்குள்ள சினிமாவிலுள்ள சில டெக்னிசியன்கள், நடிகர், நடிகைகள் வெளிமாநிங்களிலு இருந்து நடித்து வருபவர்கள் தங்கள் பெயர் பின்னால் அவர்களுடைய ஜாதியை வைத்தே பெயர் வைத்துள்ளனர். அதிலும் நிறைய பேர் தங்களாவே அந்த வழக்கத்தை மாற்றினார். சில பெரியாரை அறிந்து மாற்றிக்கொண்டனர்.

படிக்கும் போதே மாடலிங் செய்துவந்த நடிகை ஜனனி, தமிழில் மட்டும், 150இற்கு மேலான விளம்பரங்களில் நடித்துள்ளார். சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இன்ஜினியரிங் படிப்பை சென்னையில் முடித்த இவருக்கு ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கவும், ஆனால் இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் வாய்ப்பும் சேர்ந்தே வரவே, படிப்பை துறந்து சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடித்து இருந்தார். பின்னர் 3 dots என்ற படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகமானார்.

தொடர்ந்து இவர் அசோக் செல்வனுடன் நடித்த “தெகிடி” படம் இவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதனை தொடர்நது, “தர்மபிரபு, பலூன், அதே கண்கள், பாகன்” என பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இப்பொது கையில், “யாக்கை திரி, பகீரா, முன்னறிவான், வேழம்” என சில படங்களும் வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது வேழம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளனர். இதற்கான பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை ஜனனி, படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

பேசிமுடித்துவிட்டு செல்லும் பொழுது அனைவருக்கும் வேண்டுங்கள் வைக்கும் விதமாக “தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே தனது பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை நடிகை ஜனனி நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வரை பருமபாலான அவர் நடித்த்த படங்களிலும் அவரை ஜனனி ஐயர் என்றே பெயர் குறிப்பிடப்பட்டது.