இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குபதிவு தொடங்கியது!!

இடைத்தேர்தல் தொகுதிகளில் வாக்குபதிவு தொடங்கியது!! 1

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்றுவருகிறது.வடகிழக்கு பருவமழை அதிகப்படியாக பெய்ய தொடங்கியதால் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் கன மழை பெய்துவருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலும் மழை பெய்துவருவதால் வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் பல இடங்களில் மழைக்கு முன்பாகவே வாக்குகளை செலுத்த மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள தொரவி கிராமத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டதன் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் காலையிலேயே வாக்குப்பதிவுசெய்ய ஆர்வமாக வந்த மக்கள் நீண்ட வரிசையில் 45 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்தனர்.

விளம்பரம்

பின்னர் அதிகாரிகள் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வேறு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுவந்து வாக்குப்பதிவை தொடங்கினர். 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் விக்கிரவாண்டி தொகுதியில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது மழை காலமாக இந்த வாக்குப்பதிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment