கன்னட சினிமாவில் வெளியான “கிரீக் பார்ட்டி” படம் மூலம் திரையுலகில் 2015ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. அந்த படம் ஆந்திராவிலும் நல்ல வெற்றியை பெற இரண்டு மாநிலங்களிலும் ஒரே படத்தில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் தெலுங்கில் “சலோ” என்ற படத்தில் அறிமுகமாகி இரண்டு மொழிகளிலும் சில படங்கள் நடித்து வந்தார். இவ்வாறாக நகர்ந்து வந்து இருந்த இவருடைய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி பட புகழ் விஜய் தேவரைக்கொண்டா நடித்த “கீதா கோவிந்தம்” படம் மிக முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

அதுவரையில் ஆந்திரா, கர்நாடகாவில் மட்டுமே பிரபலமாக இருந்த ரஷ்மிகா இந்த படத்தின் மூலம் இந்திய அளவில் மிக பெரிய வரவேற்பையும் அறிமுகத்தையும் அடைந்தார். பின்னர் இவர் நடித்த சில தெலுங்கு படங்கள் சறுக்கினாலும் அவருடைய புகழ் மக்களிடம் வளர்ந்து கொண்டே போனது. தெலுங்கில் சமீபத்தில் வெளியான “புஷ்பா” படம் இந்திய அளவில் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படம் இவருக்கும் இன்னும் ஒரு பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்று கொடுக்க தேசிய அளவில் கொண்டாடப்படும் நடிகையாகி போனார்.

ஏற்கனவே நடிகர் கார்த்தி நடித்த “சுல்தான்” படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும், அந்த படம் பெரிய வெற்றியை பெறாமல் போனது. இப்பொது தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்துள்ள விஜய் “வாரிசு” படத்தில் இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டாரங்களில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது, அது மட்டுமின்றி இவர் விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் படத்திலும், நடிகர் ரன்பிர் கபூரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் இவரை பற்றிய ஒரு செய்தி வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதாவது இவர் வளர்க்கும் நாய்க்கும் இவர் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட்டி செல்வதாகவும், வெளிஊரிலோ, வெளிநாட்டிலோ படப்பிடிப்பு வைத்தால் தன்னுடன் சேர்த்து தன்னுடைய நாய்க்கும் இவர் டிக்கெட் எடுத்து கொடுக்கும் படியும் தயாரிப்பாளராகள் மத்தியில் கூறியதாக செய்தி வெளியாகி மிகவும் வேகமாக பகிரப்பட்டது.

இந்த செய்தியை பார்த்துள்ள ரஷ்மிகா, “எனக்கு நாய் பிடிக்கும் தான், ஆனால் நான் அவனை எங்கும் கூட்டிசெல்வதில்லை, அவன் ஹைதராபாத்திலேயே நிம்மதியாக வாழ்கிறான், உங்களுடைய இந்த செய்தி பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, என கமெண்ட் செய்துள்ளார். இது மிகவும் வைரல் ஆகி வருகிறது. தவறாக செய்தி வெளியிட்ட நிறுவனத்தை, புத்திசாலித்தனமாக ரஷ்மிகா கலாய்த்துள்ளதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
