உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் குஷ்பூ. இவர் பார்ப்பதற்கு ஹன்சிகா போலவே இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 80, 90களில் முண்ணனி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. இவர் 1986ம் ஆண்டு வெளியான வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இவரது ரசிகர்கள் திருச்சியில் கோவில் கூட கட்டியுள்ளனர். சென்னையில் இவர் பெயரில் கிடைக்கும் குஷ்பூ இட்லி மிகப் பிரபலம். இவர் 2000ம் ஆண்டு பிரபல இயக்குனநர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திதா, அனந்திதா என்ற இரு மகள்கள் உண்டு.

இவர்கள் இருவரும் குஷ்பூவைப் போலவே உடல் தோற்றத்தில் இருந்ததால் கடுமையாக உருவக்கேலி செய்யப்பட்டனர். அவ்வாறு கிண்டலடிப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வந்தார் குஷ்பூ. தற்போது இவர்கள் இருவரும் உடல் எடையை குறைத்து வேற லெவலில் மாறியுள்ளனர். இந்த நிலையில் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அவரின் மூத்த மகளான அவந்திகா லண்டனில் உள்ள நடிப்பு பள்ளியில் படித்து வருகிறார். மகள்கள் உடல் எடையை குறைத்ததை பார்த்த குஷ்பூவும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார். குஷ்பூவின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் இது குஷ்பூதானா என்று கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார். படங்கள் நடிப்பது மட்டுமல்லாது சீரியலிலும் நடித்து வந்தார் குஷ்பூ. பின்பு திமுக, காங்கிரஸ், பிஜேபி என 3 கட்சிகளிலும் பிரச்சார பீரங்கியாகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மகள்களுக்கு இணையாக போட்டி போட்டுகொண்டு உடல் எடையை குறைத்து வருகிறார் குஷ்பூ. தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் குஷ்பூ. இவர் பார்ப்பதற்கு ஹன்சிகா போலவே இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அவரின் சமீபத்திய புகைப்படங்களை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Indiaglitz