லோகேஷ் அண்ணா..தயவுசெஞ்சு இந்த கருமத்தை எல்லாம் பாத்துடாதீங்க..! விக்ரம் படத்தை அப்படியே காபி அடித்துள்ள விஜய் டிவி சீரியல்

சின்னத்திரை நாடகங்கள் தங்கள் தனித்துவங்களை இழந்து வெள்ளித்திரை படங்களை காப்பியடித்து நாட்களை கடத்துவது தற்போது வாடிக்கையாகி விட்டது. கதை மற்றும் கன்டென்ட் கிடைக்காமல் சமீபத்தில் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் படத்தை அப்படியே காப்பியடித்து நாடகங்களை ஓட்டி வருகின்றனர் சின்னத்திரை இயக்குனர்கள். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற சீரியலில் தெறி படத்தில் வரும் காட்சிகளையும், படையப்பா படத்தில் வரும் ஊஞ்சல் காட்சிகளையும் வசனம் கூட மாற்றாமல் அப்படியே காப்பி அடித்து வைத்து இருந்தனர். இது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் அண்ணா..தயவுசெஞ்சு இந்த கருமத்தை எல்லாம் பாத்துடாதீங்க..! விக்ரம் படத்தை அப்படியே காபி அடித்துள்ள விஜய் டிவி சீரியல் 1

விளம்பரம்

இது போல் பல சீரியல்கள் காப்பி அடித்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே நாடகத்தில் விக்ரம் படத்தின் ஒரு சீனை அப்படியே காபி அடித்து வைத்துள்ளனர். இந்த சீரியலைப் பொறுத்தவரை இரண்டாவது பாகம் நடந்து வருகிறது. இதில் திரவியம், சித்தார்த், கேபி போன்ற பலர் நடித்து வருகின்றனர். இந்த நாடகம் ஆரம்பித்த நாள் முதலே பல விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த நாடகத்தின் கமை தான். சித்தார்த்துக்கும் கேபியின் அக்காவிற்கும் திருமணம் நிச்சயம் செய்து இருப்பார்கள். இதற்கிடையில் சித்தார்த்தின் தம்பியான திரவியமும் கேபியும் காதலித்து வருவார்கள். ஆனால் திருமணத்தன்று காலை கேபியின் அக்காவை ரவுடிகள் கடத்தி விட, சித்தார்த் கேபியை திருமணம் செய்து கொள்வார்.

விளம்பரம்

தான் காதலித்த பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொண்டதால் வேறு வழியில்லாமல் கேபியின் அக்காவை திரவியம் திருமணம் செய்து கொள்வார். இந்த கதையை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். திருமணத்தன்று பெண்ணை கடத்தி விட்டார்கள், எனவே பெண்ணின் தங்கையை அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தீர்கள் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ரவுடிகளிடம் இருந்து பெண்ணை மீட்டு வந்த தம்பிக்கே ஏன் அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தீர்கள் என்று சீரியலின் இயக்குனரை கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள். இப்படியாக ஓடிக் கொண்டிருந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

விளம்பரம்

அதில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் வரும் ஈகிள் இஸ் கம்மிங் பிஜிஎமை எடுத்துக் கொண்டு சித்தார்த் ரவுடிகளை அடிப்பது போன்று ப்ரோமோ வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment