
காமெடி நடிகரான சிங்கமுத்துவின் மகன் வாசன், தமிழ் திரையுலகில் மதுர, அய்யன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிறகு மேற்படிப்பில் கவனம் செலுத்திய அவர், தற்போது மீண்டும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி சிங்கமுத்து தயாரிக்கிறாராம்.ஸ்டீபன் ராயல் இசை அமைக்க, செல்வராஜ் இயக்குகிறார் இந்த படத்தை. சிங்கமுத்து கூறுகையில், ‘மகனுக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்க விரும்பாததால், நானே தயாரிப்பாளராகி விட்டேன். தொடர்ந்து 3 படங்கள் தயாரிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
விளம்பரம்
விளம்பரம்