பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை டி.டி கட்டிப்பிடித்து இருந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் டி.டி என்கிற தேவதர்ஷினி. இன்றைய நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு எல்லாம் முண்ணுதரணமாக விளங்கியவர். தொலைக்காட்சி தொடர்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில் ரியாலிட்டி ஷோக்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். காஃபி வித் டி.டி என்ற ரியாலிட்டி ஷோக்களில் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து பேட்டி எடுப்பதும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ரசிகர்கள் மனத்தில் இருக்கும் கேள்விகளைக் கேட்டு பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவார் டிடி.

தற்போது சின்னத்திரைகளில் தலை காட்டுவதை விட்டு விட்டு பெரிய திரையில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். பல பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் டி.டி. இது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு பிண்ணனி டப்பிங் பேசி வருகிறார் டி.டி. சமீபத்தில் கூட நயன்தாரா திருமணத்தில் பல முக்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்த நிலையில் டி.டியையும் அழைத்திருந்தார் நயன்தாரா. அந்த அளவிற்கு பல முண்ணனி நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் நட்பு பாராட்டி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கட்டிப் பிடித்து இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் டி.டி. இந்த போட்டோக்கள் நயன்தாரா திருமணத்தில் எடுக்கப்பட்டவை. நயன்தாராவும், ஷாருக்கானும் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இதனால் அவரது திருமணத்திற்கு வந்த அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் டி.டி.

இந்த படங்களைப் பகிர்ந்து நான் அவரை கட்டியணைத்து, அவர் காதில் நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்று கேப்ஷனில் எழுதியுள்ளார்.நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டு, நான் சொல்ல நினைத்த அனைத்தையும் அவரிடம் சொன்னேன், ‘இவ்வளவு வருடங்கள், பல நினைவுகள், பல மகிழ்ச்சிகளை எங்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளீர்கள் சார், சிறப்பானதிலும் சிறப்பான வாழ்கை வாழ அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர், உங்கள் இதயத்தின் மகிழ்ச்சிக்காக நான் தினமும் பிரார்த்தனை செய்வேன் நீங்கள் குறைவாக பெறுவதற்கு தகுதியற்றவர் என்று அவர் பதிவிட்டுள்ளார்
I hugged him tight and I told him everything I wanted to tell ‘So Many years,soo many memories,soo much of joyyy you have given us sir,for all that you deserve onlyyy the bestttt of bestttt life sir. Everyday I will pray for ur heart’s Joy sir’ @iamsrk you don’t deserve any less pic.twitter.com/tus21N6Jqv
— DD Neelakandan (@DhivyaDharshini) June 27, 2022