இறந்து போன தனது கணவர் உடலுக்கு மீனாவும், தனது தந்தைக்கு மகள் நைனிகாவும் இறுதி சடங்கு செய்யும் காட்சிகள் பலரது நெஞ்சங்களை உலுக்கியுள்ளது. தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போதே சினிமாவில் அறிமுகமாகி 90களில் கொடிகட்டிப் பறந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். தற்போது இவரின் கணவர் நேற்று இரவு காலமான செய்தி அதிர்ச்சியை திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர். சாஃப்ட்வேர் இன்ஜினியர், கடந்த 2009ம் ஆண்டு இவருக்கு மீனாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர். நைனிகா 2016ம் ஆண்டு வெளியான “தெறி” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனா கணவர் இறப்பு குறித்து பல விதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. கொரோனா தொற்றால் இறந்துவிட்டார் என்று கூற, சிலர் புறா எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சியினால் இறந்தார் என்று கூறி வருகின்றனர். அனால் டிசம்பர் மாதத்திலேயே சாகர்க்கு கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே ஆக்ஸிஜன் கருவி உதவியுடன் தான் சுவாசித்து வந்துள்ளார். பின்னர் பிப்ரவரியில் கொரோனா தொற்று ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருடைய இருதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்து போகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு எவ்வளவோ முயன்றும் கிடைக்காத காரணத்தால் அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இன்று மதியம் அவரது இறுதி சடங்குகள் நடக்கும் என அறிவித்து இருந்த நிலையில் அவரது மகள் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்து வருகிறார். அதன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வயதில் அப்பாவை இழப்பது பெரிய கொடுமை என்று பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Behindwoods TV