
விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” படம் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமார் கீர்த்தி சுரேஷ். முதல் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் இவர்க்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து நடிகர் தனுஷின் “தொடரி” படத்தில் நடித்து இருந்தார். இவருக்கு மிக பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் தமிழில் சிவகார்திகேயனின் “ரஜினிமுருகன் “மற்றும் “ரெமோ” படங்களே. குறிப்பாக ரெமோ படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து விஜய், சூரியா, விஷால் என தமிழிலுள்ள முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார்.

தெலுங்கு “நேனு ஷைலஜா” என்ற படம் மூலம் நல்ல வெற்றியை பதிவு செய்த இவர், பின்னர் 2018ஆம் ஆண்டு நக் அஸ்வின் இயக்கத்தில் “மகாநடி” படத்தில் பாசஹ்பெறும் நடிகை சாவித்ரி அம்மாவின் ரோலில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து மிக பெரிய வெற்றியை பதிவு செய்தார். தெலுங்கில் எடுக்கப்பட்டு ஹிந்தி, தமிழ், மலையாள மொழிகளில் படம் மிக பெரிய வெற்றியை அனைத்து மொழிகளிலும் பதிவு செய்தது. இந்த அப்படத்தில் நடித்ததற்கு இவர் தேசிய விருதையும் வென்று அசத்தினார்.

அடுத்தடுத்த படங்கள் வந்தாலும் குண்டாக இருக்கிறார் என்ற விமர்சனம் எழவே, இப்பொது முற்றிலும் உடல் எடையை குறைத்து ஸ்லிமாகி இருக்கிறார். தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்தாலும், இதுவரையிலும் கொஞ்சம் கூட கிளாமராக நடிக்காத இவர், வாய்ப்புகள் குறைய துவங்கியதால், சமீபத்தில் வெளியான நடிகர் மகேஷ் பாபுவின் “சர்காரு வாறு பாட்ட” படத்தில் மிகவும் கிளாமராக இதுவரையில் இல்லாதளவிற்கு நடித்து இருந்தார். தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியா தளங்களிலும் அவ்வாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்பொது இவர் நடிகர் உதயநிதி, பாஹத் பாசில், வடிவேல் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கம் “மாமன்னன்” மற்றும் ஜெயம் ரவி – எம்.ராஜேஷ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கல்யாண உடை என கேப்டஷன் இட்டு வெளியிட்டுள்ளார், இதனால் இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
