இயக்குனர் ஹரி பற்றி அறிமுகமே தேவையில்லை. கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு அல்லது போலீஸ் ரவுடிகளை அடக்குவது போன்ற பல வெற்றிப் படங்களை எடுத்துள்ளார். சாமி, கோவில், தாமிரபரணி, அருள், ஐயா, வேல், சிங்கம் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ஹரி. இவர் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகளான பீர்த்தாவின் கணவர் ஆவார். இந்த நிலையில் மனைவியின் அண்ணன் அருண் விஜயை வைத்து யானை படத்தை இயக்கி இருந்தார் ஹரி. இந்த படம் ஜூலை 1 திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஆக்ஷனில் கலக்கி எடுத்துள்ளார் அருண்விஜய். என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அறிமுகம் ஆன அருண் விஜய்க்கு ஹீரோவாகும் வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை, இதனால் யானை படம் அவருக்கு திருப்புமுனையாக அமையும் என்று இயக்குனர் ஹரி கூறி வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் முதன்முதலாக இயக்கிய படம் சாமி. 2003ல் வெளி வந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தற்கு பின்னர் விக்ரம்மின் மார்க்கெட் உயர்ந்தது. இயக்குனர் ஹரிக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் விக்ரம் என்ட்ரியில் வரும் பாட்டில் இட்லியில் பீர் ஊற்றிக் பிசைந்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். இது அப்போதே சில சர்ச்சைகளுக்கு உள்ளானது. ஏனென்றால் விக்ரம் போலீஸ் கேரக்டரில் நடித்து இருப்பார். போலீசே இப்படி ரவுடிகள் போல பீர் ஊற்றி சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி 19 ஆண்டுகள் கழித்து அந்த சீன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் ஹரி. அதில் அவர் கூறியுள்ளதாவது, சாமி படத்தில் ஹீரோவை லோக்கலாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். உண்மையில் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. மதுவுக்கும், போதை பழக்கத்திற்கும் நான் எதிரானவன், கடந்த வாரம் ஒரு புள்ளிவிவரத்தைப் பார்த்தேன் அதில் இந்தியாவில் 70% மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும்,அதில் 40% மாணவர்களின் வீட்டிற்கு தெரியாமல் போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வரும் சந்ததிகளை நல்ல வழியில் கூட்டிச் செல்வோம் என்றும் தெரிவித்தார். அவரின் முழுப் பேட்டியை நீங்களும் காண..Watch the below video..
Youtube video code embed credits: Cinema Vikatan