பணிப்பாறையில் 20கி.மீ நீளத்திற்கு விரிசல்!!

பணிப்பாறையில் 20கி.மீ நீளத்திற்கு விரிசல்!! 1

பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டத்திலுள்ள மிகப் பெரிய பணிப்பாறையில் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

பூமியில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஆங்காங்கே உள்ள பணிப்பாறைகள் உருகி வருகிறது. மேலும் விரிசல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஞ்ஞானிகள் அண்டார்டிகா கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பைன் தீவிலுள்ள பி–46 (B–46) என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பணிப்பாறையில் ஆய்வு செய்து வந்தனர். அந்த ஆய்வில் வெப்பத்தின் தாக்கத்தால் அதில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 10 மீட்டர் நீளம் வரை விரிசல் ஏற்பட்டு வருகிறதாகவும் அது அதிகரித்து வருகிறதாகவும் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலால் குறிப்பிட்ட பணிப்பாறை முழுவதுமாக உருகினால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் உடனடியாக ஒரு மில்லி மீட்டர் வரை உயரும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment