அனைவரும் மிக ஆவலாக எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது. இதை தமிழின் முண்ணனி நடிகரான சூர்யா வெளியிட்டுள்ளார். அமரர் கல்கியால் சோழர்களின் வரலாறு, சில புனைவு கதாபாத்திரங்களுடன் நாவலாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் ஒரு வார இதழில் சிறு தொடராக வந்த இந்த கதை பின்னாளில் 5 பாகமாக வெளிவந்துள்ளது. இத்தகைய வரலற்றுப் புதினத்தை இயக்குனர் மணிரத்னம் படமாக உருவாக்கியுள்ளார். இரண்டு பாகமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதையை பலர் படமாக்க முயற்சி செய்துள்ளனர். ஏன் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கூட இந்த கதையை படமாக்க முயற்சி செய்து பின்னர் கைவிட்டார். அப்படி ஒரு பிரம்மாண்ட கதையை மணிரத்னம் இயக்கி சாதனை புரிந்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னின் செல்வன் படம் மணிரத்னம்-க்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் படத்தற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இரண்டு பாகங்களும் சேர்த்து படம் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன். படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா போன்ற பல முண்ணனி நடிகர்கள் நடித்துள்ளனர்.ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ராஜராஜசோழனாக ஜெயம் ரவியும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், குந்தவை நாச்சியாராக த்ரிஷாவும், ஆழ்வார்க்கடியானாக ஜெயராமும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ்ம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்கள் கடந்த வாரம் தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இதில் ஆதித்த கரிகாலனுக்குப் பதிலாக ஆதித்ய கரிகாலன் என்றும், அருள்மொழி வர்மனுக்குப் பதிலாக அருண்மொழிவர்மன் என்றும் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்னியின் செல்வன் நாவலைப் படித்த ரசிகர்கள் பலரும் பெயரில் இருந்த தவறால் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது. தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், ஹிந்தியில் அமிதாப் பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் படத்தின் டீசரை வெளியிட்டனர். மிகப் பிரம்மாண்டமாக உள்ள அந்த டீசரை நீங்களும் காண..Watch Ponniyin Selvan Teaser Below..
Youtube Video Code Embed Credits: Lyca Productions.