“பாகுபலிக்கு முன் இது ஒரு குப்பை படம்…..தமிழர்களின் பெருமையை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்”!!

அறிவிக்கப்பட்ட முதலே பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம் உருவாகியுள்ளது. மிக பெரிய பொருட்செலவு, பெரிய இயக்குனர், ஆகச்சிறந்த கதை, மிக பெரிய நட்சத்திர பட்டாளம் என உருவகத்துவங்கிய போதே பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டது பொன்னியின் செல்வன் படம். பாஹுபலி படம் இந்திய அளவில் பெரிய சாதனை செய்துள்ளதால் தெலுங்கு ரசிகர்கள் அந்த படத்துடன் இதனை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டீஸர் நேற்று வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

"பாகுபலிக்கு முன் இது ஒரு குப்பை படம்.....தமிழர்களின் பெருமையை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்"!! 1

விளம்பரம்

இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் பலரும் படத்தின் டீசருக்கு வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் அதனை எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மணிரத்னத்திற்கு சிறந்த படைப்பை எடுத்த போதிலும் அதில் இடம் பெரும் காட்சிகளும், கதை அமைப்புகளும் இந்தியாவில் ஏற்கனவே வெளியாகி மாபெரும் சாதனையை புரிந்த பாகுபலியின் நிழல் இல்லாத வண்ணம் அமைய வேண்டும்.

"பாகுபலிக்கு முன் இது ஒரு குப்பை படம்.....தமிழர்களின் பெருமையை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்"!! 3

விளம்பரம்

இந்திய சினிமாவின் உச்சத்தை பாஹுபலி படம் தொட்டது. படத்தில் இடம்பெறும் காட்சிகளும், கதாபாத்திரங்களுமே அந்த படத்தின் இமாலய வெற்றிக்கு காரணமாகும். அதனை மிஞ்சி எவரால் படம் எடுக்க முடியும் என்பது கேள்வி குறியே. அதேபோல பாகுபலி படம் பல ஆண்டுகள் ஒரு முறை வெளியாகும் மிக பெரிய படமாகும்.

தொடர்புடையவை  சிம்பு படத்துடன் டான் படத்தை ஒப்பிட்டு பேசிய எஸ்.ஜே.சூர்யா.

"பாகுபலிக்கு முன் இது ஒரு குப்பை படம்.....தமிழர்களின் பெருமையை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்"!! 5

விளம்பரம்

அந்த சிக்கலில் தான் பொன்னியின் செல்வன் சிக்கியுள்ளது. இதனை பலரும் பாகுபலிக்கு போட்டியாக எடுக்கப்பட்ட படம் என எண்ணுகிறார்கள். பொன்னியின் செல்வன் கதை இயற்றப்பட்டு 70 வருடங்கள் கடந்தோடி விட்டன. 3 தலைமுறை முயன்று இப்பொது தான் அந்த படம் உருவாகியுள்ளது. அதே போல பாகுபலி ஒரு புனைகதை. பொன்னியின் செல்வன் ஒரு சோழ சாம்ராஜ்ய அரசனின் கதை. இரண்டியும் ஒப்பிடுவது தவறே எனினும் அதனை தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.

"பாகுபலிக்கு முன் இது ஒரு குப்பை படம்.....தமிழர்களின் பெருமையை கொச்சைப்படுத்தும் தெலுங்கு ரசிகர்கள்"!! 7

விளம்பரம்

தெலுங்கு ரசிகர்களும் இது ஒரு நாவல், போட்டி பாடம் இல்லை என்பதை உணர்ந்து படத்தை படமாக பார்க்க வேண்டுமே தவிர இவ்வாறு பிரச்சனையை உண்டாக்குவது சரியான பார்வையல்ல. அதே நேரம் சோழர்கள் மிக பெரிய தமிழ் கூட்டத்தை கட்டியாண்டவர்கள் என்பதால், அதற்குறிய வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றால் மற்ற மொழிகளில் விமர்சனத்தை ஏதிர்கொள்ள போவது நிச்சயமே.

விளம்பரம்

Leave a Comment