“சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி….ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்”!!

இப்பொது சமூகவலைத்தளத்தை திறந்தாலே காணப்படும் விஷயம் நம்ப லெஜெண்ட் அண்ணாச்சி தான்.கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்  சரவணா அருள் என்பவர் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து அசத்தினார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை கலாய்த்து தள்ளினாலும் அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து பெஸ்ட்டு பெஸ்ட்டு என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தி லெஜண்ட் என்று ஒரு திரைப்படத்தை எடுத்துள்ளார்.

"சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி....ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்"!! 1

விளம்பரம்

இந்த திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகின்றது. அதன் பிறகு பாலிவுட் நடிகையை மற்றும் உலக அழகியுமான ஐஸ்வர்யாராயை சரவணன் அந்த படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்துள்ளார். அதற்காக பல கோடிகள் சம்பளம் கொடுக்கப் போவதாக கூறியும் அவர் நேரில் கூட பார்ப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.

தொடர்புடையவை  அயோ இந்த நாய் குட்டி என்ன இவளோ சேட்டை பண்ணுது.! ஜோதிகா வெளியிட்ட Cute வீடியோ.!

"சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி....ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்"!! 3

விளம்பரம்

இந்தப்படத்தில் நடிகை ஊர்வசி ரௌட்டலாவை கதாநாயக பல கோடிகள் கொடுத்து புக் செய்துள்ளார்கள். சமீபத்தில் நடைபெற்ற சரவணா திரைப்படத்தின் ஆடியோ லான்ச் 10 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவானது. மேலும், கிட்டத்தட்ட பத்து நொடிகளுக்கு 6.5 கோடி மேல் பணம் கொடுத்து வர வைக்கப்பட்டதாக  கூறப்படுகின்றது. இப்படி ஒரு நிலையில் தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லர் தற்போது ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த சாதனை கண்ட பல ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள்.

"சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி....ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்"!! 5

விளம்பரம்

அது என்னவென்றால் அந்தப் படத்தின் டிரைலர் சுமார் 26 மில்லியன் பார்வையாளர்களை பெற்று உள்ளது. மேலும், நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வலிமை திரைப்படத்தின் டிரைலர் வெறும் 24 மில்லியன் பார்வையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வலிமை திரைப்படம் வந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது.

"சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி....ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்"!! 7

விளம்பரம்

இவ்வாறாக சமூகவலைத்தளங்களில் வைரலான படமாக இருந்து வந்த “தி லெஜெண்ட்”படம் தற்போது ரிலீஸ்ஸிற்கு தயாராகி வருகிறது. படத்தை 400 முதல் 500 திரையரங்குகளில் வெளியிட அண்ணாச்சி திட்டம் தீட்டியுள்ளார். படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் வெளியிடுகிறார். படம் வருகிற ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என சில தினங்கள் முன்பு தான் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  தாலி கட்டும் நேரத்தில் கழன்று விழுந்த விக்..திருமணத்தை நிறுத்திய மணப்பெண் | U.P

"சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி....ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்"!! 9

விளம்பரம்

தனி ஹீரோவாக நிறைய திரையரங்குகளில் வெளியிட நினைத்த அண்ணாச்சிக்கு இப்பொது செக் வைத்துள்ளார் நடிகர் சந்தானம். ஆம் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் படம் “குலுகுலு”. மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். இவர் நடிகர் விஜயின் “மாஸ்டர்”, கமலின் “விக்ரம்” மற்றும் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்- விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் “தளபதி 67” படத்திலும் வசனம் இயற்றவுள்ளார். இயங்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய வட்டத்தில் இவர் உள்ளார்.

"சோலோ ஹீரோவாக வர நினைத்த அண்ணாச்சி....ஸ்பேரிங் போடும் காமெடி நடிகர்"!! 11

விளம்பரம்

இப்பொது இது லெஜெண்ட் அண்ணாச்சிக்கே பிரச்சனை ஆகும். ஏனெனில் ஏற்கனவே பெரிய வெற்றி படங்கள் இல்லை எனினும் நடிகர் சந்தானம் தன்னை ஒரு நடிகனாக நிலைநிறுத்துக்கொண்டவர். அதுவும் அவர் ரத்னகுமாருடன் பணிபுரிந்துள்ளதால், இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அந்த போட்டியை சமாளித்து, தன்னை ஒரு நடிகனாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நம்ப அண்ணாச்சி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment