தாமரைச்செல்வி இந்த பெயரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டிலே இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு மிகப் பிரபலமானவர். இவர் கோவில்கள் மற்றும் திருவிழாக்களில் நடக்கும் நாடகக் கூத்துகளில் நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். மிக எளிய பின்னணியில் இருந்து வந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு சற்று செல்வாக்கு அதிகரித்தது. பிக் பாஸ் போட்டிகளில் கடுமையாக விளையாடி தனது திறமைகளை காட்டி மக்களை அதிகமாக ஈர்த்து வந்தார் இவர். இவர்தான் ஜெயிப்பார் என்று எண்ணியிருந்த நிலையில் குறைவான வாக்குகள் பெற்ற காரணத்தால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பின்பு மீண்டும் யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று எண்ணி இருந்த நிலையில் அங்கும் அவரால் வெற்றி பெற இயலவில்லை. ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் தமிழகம் எங்கும் பிரபலமடைந்தார். அவருக்கான செல்வாக்கும் அதிகரித்து வந்தது. நாடக கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று இவரை பார்த்து பலரும் சொல்ல தொடங்கினர். இவர் வெளியே வந்த பின்பும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகளின் நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

பிக்பாஸ்க்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியவர் அதில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இவர் தனது கணவருடன் செய்யும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகில் பதிவேற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி தற்போது தாய்க்கிழவி பாடலுக்கு தனது கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு வருகிறார் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்காக அவர் கடுமையாக ப்ராக்டிஸ் செய்து வருகிறார் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலத்தில் வரும் தாய்க்கிழவி பாடலுக்கு தன்னுடைய கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண Watch the below video..
Youtube Video Code Embed Credits: Viral Videos