பேட்ட, விஸ்வாசம்’ ஒரே நேரத்தில் வெளியாகும் போது ‛பிகில், கைதி’ ரிலீசாக கூடாதா!! கார்த்தி பேச்சு!!

பேட்ட, விஸ்வாசம்' ஒரே நேரத்தில் வெளியாகும் போது ‛பிகில், கைதி' ரிலீசாக கூடாதா!! கார்த்தி பேச்சு!! 1

விஜய் நடித்த பிகில் படத்துடன் தனது கைதி படம் ரிலீசாவது குறித்து கார்த்தி கருத்து தெரிவித்திருக்கிறார். தீபாவளியையொட்டி விஜய்யின் பிகில் படமும், கார்த்தியின் கைதி படமும் நாளை(அக்.,25) ஒரே நாளில் ரிலீசாகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து எடுத்த படம் பிகில் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இவர்களது கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் போலவே இப்படமும் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிகில் படத்துடன் கைதி படம் தைரியமாக மோதுவது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கைதி படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படம் ஆகும். ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் பாடல்கள் என்பதே கிடையாது.

விளம்பரம்

இந்நிலையில் பிகில் படத்துடன் நேரடியாக மோதுவது குறித்து கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிகில் ஒரு பெரிய படம். அந்த படத்திற்கு சிங்கத்துக்கு கிடைக்கும் பங்கு போல் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும். அதேசமயம் கைதிக்கும் நிறைய தியேட்டர்கள் கிடைக்கும். பேட்டயும், விஸ்வாசமும் ஒரே நாளில் வெளியாகும் போது, பிகிலும் கைதியும் ஏன் ஒரே நாளில் ரிலீசாகக்கூடாது” என கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

விளம்பரம்

Leave a Comment