நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாலாவின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். ஜெய் பீம் படம் வெற்றிக்குப் பிறகு பாண்டியராஜன் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்திருந்தார் சூர்யா. இந்த படம் சரியாக ஓடவில்லை. அடுத்தபடியாக சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும், பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத சூர்யா 41 படத்திலும் நடித்து வந்தார்.
சமீபத்தில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றுள்ள விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை மக்கள் பலரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

இதுபோல சூர்யா பல நல்ல படங்களை நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் சூர்யா 41 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள பாலாவின் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. கன்னியாகுமரி ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இந்த படம் படமாக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த படம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பாலாவைப் பொறுத்தவரை சமூக சிந்தனை உள்ள படங்களை மட்டுமே இயக்குவார். கருத்து சார்ந்த படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் பாலாவிற்கும் சூர்யாவுக்கும் சண்டை, அதனால் சூர்யா 41 படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் ஒரு புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து அப்படி எதுவும் இல்லை, தான் பாலாவின் கதையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பது போல புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார் சூர்யா. இன்று பாலாவின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அப்டேட் ஒன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் “வணங்கான்”என்ற பெயருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

#வணங்கான் #Vanangaan #Achaludu 🔥#Suriya41 #Suriya41TitleLook@Suriya_offl #Jyotika #DirBala @gvprakash @IamKrithiShetty @rajsekarpandian #MamithaBaiju @editorsuriya #Mayapandi @kabilanchelliah @manojdass07 @proyuvraaj pic.twitter.com/pSXJV9F2cT
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 11, 2022