புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாருனு தெரியுதா? 11 வயதில் கஷ்டப்பட்டு இன்று பெரிய உயரத்தில் இவர் யாருனு சொல்லுங்க பாப்போம்

திரைப்படங்களில் கதை திரைக்கதைகளுக்கு இணையாக பேசப்படுவது ஒன்று என்றால் அது இசைதான். இசை இல்லாத ஒரு படம் குப்பை படம் போல இருக்கும். அந்த வகையில் திரைப்படங்களில் தன் இசையால் பல கோடி உள்ளங்களை கவர்ந்தவர் ஏ.ஆர். ரகுமான். இவரை இவரது ரசிகர்கள் “இசை புயல்” என்றும் அழைப்பதுண்டு. உலக அரங்கில் இசைக்காக ஆஸ்கர் விருது வாங்கி தமிழர்களை கௌரவித்த ஒரு இசை கலைஞர் என்றால் அது ஏ ஆர் ரகுமான் தான். 1985 ஆம் ஆண்டு தனது இசை வாழ்க்கையை தொடங்கியவர், தனது தந்தையுடன் இணைந்து சில கச்சேரிகளில் பங்கெடுத்து வந்தார். சிறு வயதிலேயே தனது தந்தை இழந்து விட்டதால் வருமானத்திற்கு வழியில்லாமல், தனது தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தின் மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார் ஏ ஆர் ரகுமான்.

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாருனு தெரியுதா? 11 வயதில் கஷ்டப்பட்டு இன்று பெரிய உயரத்தில் இவர் யாருனு சொல்லுங்க பாப்போம் 1

விளம்பரம்

பின்னர் ஆர்மோனியம், கிட்டார், கீபோர்ட் உள்ளிட்டவர்களை வாசிக்க கற்றுக் கொண்ட அவர், தனது 11 வது வயதில் இளையராஜாவின் குழுவில் இணைந்தார். பின்பு அவரிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் பெரிய இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. தன்னுடைய கடின உழைப்பாலும் திறமையாலும் அவர் என்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார். இளையராஜாவுக்கு பின்னர் இவர் எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்தார். ட்ரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்கல் பள்ளியில் இசை பட்டத்தை பெற்றார். பின்னர் 1992 ஆம் ஆண்டு முதல் தனது வீட்டிலேயே இசை கலையகம் ஒன்றை ஏற்படுத்தினார்.

தொடர்புடையவை  தமிழுக்கு தெரியாமல் மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு செல்லும் சரஸ்வதி.! ப்ரோமோ இதோ.!

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாருனு தெரியுதா? 11 வயதில் கஷ்டப்பட்டு இன்று பெரிய உயரத்தில் இவர் யாருனு சொல்லுங்க பாப்போம் 3

விளம்பரம்

அந்த ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் இவர் இசையமைத்தார். இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அன்பு தொடங்கி இன்று வரை இசைக்காக அவர் பல சாதனைகளை செய்துள்ளார். இசையை விரும்பும் பலருக்கும் அவர் உதவி செய்து வருகிறார். 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது தரப்பட்டது. விருது வாங்கியவுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் கூறினார். 1997ம் ஆண்டு வெளிவந்த மின்சாரக்கண்ணா படத்திற்கும், 2003ம் ஆண்டு வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்தது. அவரின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாருனு தெரியுதா? 11 வயதில் கஷ்டப்பட்டு இன்று பெரிய உயரத்தில் இவர் யாருனு சொல்லுங்க பாப்போம் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment