அஜித் ரசிகர்களை ஈர்க்க திட்டம் தீட்டிய அட்லி!!

அஜித் ரசிகர்களை ஈர்க்க திட்டம் தீட்டிய அட்லி!! 1

தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரு படங்களிலும் வெற்றியை கொடுத்த அட்லீ இப்போது உருவாகியுள்ள 3 ஆவது படம் பிகில். இதையும் வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். கோடான கோடி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த படம் பிகில். கிட்டத்தட்ட ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாகவே ரூ.136.55 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிகில் படம் குறித்து தனது அனுபவங்களை ரசிகர்களுக்கு பகிரும் போது, ஒரு ரசிகர் தல அஜித் பற்றி ஒரு சொல் என்று கேட்கவே, அதற்கு அஜித் மீது மிகுந்த மரியாதை உண்டு. விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகியவை எனக்கு அண்மையில் பிடித்த படங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

இந்த பதில் மூலம், அஜித் ரசிகர்களை கவருவதற்கு அட்லி போட்ட புதிய திட்டம் இது என்று பலரும் கூறி வருகிறார்கள். பிகில் படம் முழு கேங்ஸ்டர் படம் என்றும் ராயப்பன் கதாபாத்திரம் தான் தனக்கு பிடித்த கதாபாத்திரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment