ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் “யாரடி நீ மோகினி”. இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நக்ஷத்ராவும், சைத்ரா ரெட்டியும் நடித்து இருந்தனர். துணை கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடித்து இருந்தார். நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருந்த இந்த தொடர், அண்மையில் முடிவடைந்தது.

இதில் நடித்ததன் மூலம் மூவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. மிக நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளனர். நடிகை சைத்ராவிற்கு அண்மையில் திருமணம் முடிந்தது. மூவரும் வெவ்வேறு தொடர் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நக்ஷத்திரா கலர்ஸ் தமிழில் “வள்ளி திருமணம்” என்ற தொடரிலும், சைத்ரா நடிகர் அஜித்தின் “வலிமை” படத்திலும், இப்பொது சன் டிவியில் “கயல்” தொடரிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீநிதி மட்டும் அப்பப்போ சில தொடர்களில் தலை காட்டி வருகிறார். வலிமை படத்தின் போதும் சர்ச்சை கூறிய வகையில் பேசி அஜித் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார். பின்னர் அழுது கொண்டே, என்னை மன்னித்து விடுங்கள், நான் அவ்வாறு கூறவில்லை என இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டார். அடுத்து அம்மாவுடன் சண்டை வீடியோ, அம்மா இவரை சபித்து வெளியிடும் வீடியோ என பலவேறு தேவையற்ற விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

திடீரென நடுவில் சிம்பு என்னை லவ் பண்றார், என்னை அவருடன் சேர்த்து வையுங்கள் என அதிர்ச்சியை கிளப்பினார். அதற்கும் சாட்சிகள் இருக்கு, நான் பொய் கூற வில்லை, என சொல்லி 3,4 நாட்களாக கலாட்டா செய்து கொண்டிருந்தார். நடிகர் சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர் உடல் நிலை மோசமாக அப்போது இவரு பேசினால் பெரிய பிரெச்சனையால் மாட்டிக்கொள்வோம் என அறிந்து ஒரு 2 நாட்கள் அம்மணி சும்மா இருந்தார்.

இப்பொது கொஞ்சம் யோசித்து 2 நாட்கள் முன்பு தான் தோழி நட்சத்திராவை திருமணம் செய்வதாக கூறி, ஒருவர் அவரை அடைத்து வைத்து ஏமாற்றி வருகிறார். அவளை காப்பாற்றுங்கள், இல்லையேல் முன்னர் இறந்த நடிகர் சித்ராவை போல இவருக்கும் நடந்து விடும் என புலம்பிய படி ஒரு விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.

நடுவில் திடீரென “இவளும் சைத்ரா மாதிரி ஆகிட கூடாது…அவள காப்பாத்துங்க” என தன்னுடைய தோழி நக்ஷத்திரா ஆபத்தில் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று வெளியிட்டார். அதற்கு பின் தான் இவர்க்கு மிக பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வர துவங்கின. பின்னர் தன் தாயாரால் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்டடார் என கூறப்பட்டது. இப்பொது அண்மையில் நடிகை நட்சத்தரவிற்கும் அவருடைய காதலர் விஷ்வா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நக்ஷத்ராவின் தோழியும் சீரியல் நடிகையுமான நிவாஷினி திவ்யா, நக்ஷத்திரா மற்றும் அவரது வருங்கால கணபவருடன் எடுத்துக்கொண்டபுகைப்படம் ஒன்றை தன்பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் ‘Family’ என்றும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து கேலி செய்யும் விதமாக எமோஜி ஒன்றை போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்த ஸ்ரீநிதி, “உன்மீது இருக்கும் அன்பு மற்றும் அக்கறையுடன் ‘வாழ்க வளமுடன்’ என்றும் அன்புடன் உங்கள் SSR’ என்று பதிவிட்டு இருந்தார்.
