மாபெரும் கலைஞன்.! வீட்டில் அனாதையாக உயிரிழந்து கிடந்த சோகம்.! இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வர கூடாது

அழியாத கோலங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பிரதாப் போத்தன். இவர் இன்று மறைந்துள்ள செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரதாப். இவர் மலையாளத்தில் வெளியான ஆரவம் என்னும் படத்தின் மூலம் 1978 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.

மாபெரும் கலைஞன்.! வீட்டில் அனாதையாக உயிரிழந்து கிடந்த சோகம்.! இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வர கூடாது 1

விளம்பரம்

மை டியர் மார்த்தாண்டன், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மகுடம், லக்கி மேன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.  இவர் நடித்த மூடுபனி, அழியாத கோலங்கள், பன்னீர் புஷ்பங்கள் போன்ற பாடங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்கள். மூடுபனி என்ற படத்தில் அவர் சைக்கோ கில்லர் கதாபாத்திரமாக நடித்திருப்பார். அந்த படம் அவருக்கு திருப்புமுனையாக இருந்தது. இன்று கூட என் இனிய பொன் நிலாவே என்ற ஜேசுதாஸின் பாடலுடன் கூடிய அவரது நடிப்பு கண் முன்னே நிற்கிறது. வறுமையின் நிறம் சிகப்பு படத்திலும் வாழ்வே மாயத்திலும் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலிக்கும் நபராக நடித்திருப்பார்.

தொடர்புடையவை  அப்போ துபாய் இப்போ ஜார்ஜியா!!!பாலியல் புகாரில் போலீஸிடம் மாட்டாமல் நாடு விட்டு நாடு தப்பித்து கொண்டிருக்கும் மலையாள நடிகர்!!

மாபெரும் கலைஞன்.! வீட்டில் அனாதையாக உயிரிழந்து கிடந்த சோகம்.! இந்த மாதிரி நிலைமை யாருக்கும் வர கூடாது 3

விளம்பரம்

நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஆண்டு 1986 ஆம் ஆண்டு அவரை விட்டுப் பிரிந்தா.ர் பின்னர் இவருக்கு அமலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கேயா என்ற மகள் இருக்கிறார். தனுஷின் படிக்காதவன் படத்தில் தனுஷிற்கு அப்பா கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும், சமீபத்தில் வெளியான மம்முட்டி நடிப்பில் வெளிவந்த சிபிஐ 5 படத்திலும் பிரதாப் நடித்திருந்தார். தான் இறக்கும் வரை நடித்துக் கொண்டே இருந்த அவர் தற்போது சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த செய்த நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Indiaglitz

விளம்பரம்

Leave a Comment