திருச்சிற்றம்பலத்தின் 2வது பாடல் வெளியானது..! உங்களுக்கு வயசே ஆகாதா தனுஷ்.. செம்ம Cute ஆக இருக்கும் தனுஷ் நித்யா மேனன்

திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாவது பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடலான மேகம் கருக்காதா என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் இப்போது ஆகஸ்ட் 18, 2022 அன்று திரைக்கு வரும் என்று நடிகர், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். வீடியோ சாங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலத்தின் 2வது பாடல் வெளியானது..! உங்களுக்கு வயசே ஆகாதா தனுஷ்.. செம்ம Cute ஆக இருக்கும் தனுஷ் நித்யா மேனன் 1

விளம்பரம்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷும் அனிருத்தும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் அவர்களிடமிருந்து ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் புகழ்பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம். தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல் கதைகள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும்.

தொடர்புடையவை  படமா இது? உயிரை வாங்கிட்டானுங்க.! தேவையில்லாத லக்கேஜ்.! டைரி படத்தை திட்டி தீர்த்த ப்ளூ சட்டை

திருச்சிற்றம்பலத்தின் 2வது பாடல் வெளியானது..! உங்களுக்கு வயசே ஆகாதா தனுஷ்.. செம்ம Cute ஆக இருக்கும் தனுஷ் நித்யா மேனன் 3

விளம்பரம்

தனுஷ் மித்ரன் ஜவஹருடன் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைகிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.ஏற்கனவே தாய் கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது பாடலான மேகம் கருக்காதா என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below Video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment